சாலை பாதுகாப்பு வாரம் 7 ஆம் நாள்
ஒய் திஸ் கொலை வெறி
யாரும் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்துவதில்லைதான். ஆனால் செய்யக்கூடாதவற்றைச் செய்வதால்தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ‘செயத்தக்க அல்ல செயக்கெடும்..’ என்ற வள்ளுவரின் குறளை நினைவில் வைத்து கீழே உள்ளவற்றை கடைப்பிடித்தால் நிச்சயம் விபத்துக்கள் குறையும் இதில் சந்தேகமே இல்லை.
ஒரு போதும் வேகமாக ஒட்ட வேண்டாம்.
போதிய இடைவெளி இல்லாமல் ஒட்ட வேண்டாம்
குடித்துவிட்டு வாகனத்தை ஒட்ட வேண்டாம்
மழை, பனி நேரத்தில் வேகமாக ஒட்ட வேண்டாம்
வளைவுகளில் எப்போதும் முந்த வேண்டாம்
நிறுத்துக் கோட்டில் நிறுத்தாமல் ஒட்ட வேண்டாம்
சாலை விதிகளை மதிக்காமல் ஒட்ட வேண்டாம்
வேகத் தடைகளில் வேகத்தைக் குறைக்காமல் ஒட்ட வேண்டாம்
சாலையிலுள்ள அறிவிப்புகளை மீறி ஒட்ட வேண்டாம்
திரும்பும் முன் சைகை காண்பிக்காமல் திரும்ப வேண்டாம்
சிகப்பு விளக்கில் நிறுத்தாமல் போக வேண்டாம்
இவற்றைத் தெரிந்து கொண்டும் இவற்றை மீறி ஓட்டுகிறார்கள் என்றால் இவர்களுக்கு தங்கள் உயிர் மீதும் பயம் இல்லை மற்றவர்கள் உயிர் பற்றியும் கவலையில்லை என்றுதானே அர்த்தம்









