Powered By Blogger

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சாலை பாதுகாப்பு வாரம் 2015

சாலை பாதுகாப்பு வாரம் 2015





சாலை பாதுகாப்பு வாரம்

சாலை பாதுகாப்பு வாரம் சந்தோஷத்துடனும் மிகுந்த ஆர்வத்துடனும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பரோடா, வடோதரா, புனே, புபனேஷ்வர் போன்ற இந்தியாவின் பல பாகங்களிலும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது..சாலை பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளை நடத்தி சாலையில் எப்படி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது என்பது பற்றி ஊக்குவிக்கப் படுகிறார்கள்..
இந்த சாலை பாதுகாப்பு வாரத்தில் பல்வேறு விதமான சாலை பாதுகாப்பு தொடர்பான சாலை பாதுகாப்பு பேனர்களையும், பாதுகாப்பு போஸ்டர்களையும், பாதுகாப்பு வீடியோக்களையும், சாலை பயன்படுத்து பவர்களுக்குச் சென்றடையும்படி விநியோகிப்பார்கள். திட்டமிட்டு, முறைப்படுத்தப்பட்டு, ஒழுங்கோடு பயணிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று அர்த்தம். முறைதவறி ஓட்டுபவர்கள் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கவும் சாலை பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். .

சாலை பாதுகாப்பு வாரம் 2015
இந்தியாவில் ‘’சாலை பாதுகாப்பு வாரம் 2015’’ – ஜனவரி 11ந்தேதி (ஞாயிறு) முதல் 17ந் தேதி (சனிக்கிழமை) வரை அனுசரிக்கப் படுகிறது.
சாலை பாதுகாப்பு வாரம் எப்படி அனுசரிக்கப்படுகிறது;--
சாலைபாதுகாப்பு வாரத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.      சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு சாலபாதுகாப்பு நோட்டிஸ்கள், பூக்கள், சாக்கலேட்டுகள் விநியோகித்தல்,      
சாலைபாதுகாப்பு முறைகளையும், சாலை பாதுகாப்பின் அவசியத்தையும் சாலையைப் பயன் படுத்துவர்களுக்கு சொல்லித் தருதல், உதாரணத்திற்கு எப்போதும் எங்கேயும் வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட்,/  தலைக் கவசத்தைப் பயன் படுத்துவதன் அவசியத்தை உணர்த்துதல்                                    வர்ணம் தீட்டுதல், படங்கள் வரைதல் போன்ற போட்டிகள் நடத்துதல், சாலைபாதுகாப்பு அறிவிப்புகள், கண்காட்சி நடத்துதல், தலைக்கவசம் அணிய ஊக்குவிப்பதுற்காக ஸ்கூட்டர் ரேலி, சாலை பாதுகாப்பு சிக்னல்கள் பற்றிய தேர்வுகள் நடத்தி பரிசு தருதல்.                       அகில இந்திய வானொலியில் சாலை பாதுகாப்பு பற்றிய விவாதங்கள் நடத்துதல்,செமினார் ஒர்க் ஷாப் போன்றவற்றை நடத்துதல் =  ,
இலவச மருத்துவ முகாம்கள், ஓட்டுனர்களுக்கான பாதுகாப்பான ஓட்டும் முறைப் பயிற்சிவகுப்புகள் நடத்துதல், சாலை பாதுகாப்பு வினாடி வினா போட்டிகள் நடத்திப் பரிசு தருதல்.  பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆர்வம் வருவதற்காக சாலை பாதுகாப்பு தொடர்பான விளையாட்டுகள், புதிர் போட்டிகள், போன்ற பல்வேறு விதமான போட்டிகளை நடத்தி பரிசுகள் தருதல்,

சாலை பாதுகாப்பு வாரத்தின் அவசியம்
வ்வொரு வருடமும் கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் சாலை விபத்துக்களில் உயிர் இழக்கிறார்கள். வேறு பலர் மன உலைச்சல் களுக்கு உள்ளாகிறார்ள் சிலர் நினைவை இழக்கிறார்கள், கை கால்களை இழக்கிறார்கள், சிலர் வாழ்நாள் முழுதும் பல்வேறு  துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள், குடும்ப வருமாணம் இழப்பது, பொருளாதார ரீதியில் பல இழப்புகளை அடைவதும் கருத்தில் கொள்ளப் படவேண்டிய விஷயங்களே. குறிப்பாக இந்தியாவில்இவை எல்லாம் சாலை பாதுகாப்பு நடவடிக்கைபின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் அதிகரிக்கின்றன. இந்தியாவில் மிக மிக அதிகமானவர்கள் சாலையைப் பயன் படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டியகளாகவோ அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டிகளாகவோ, இருக்கிறார்கள் என்பதால் அவர்கள் சாலை பாதுகாப்பின் அவசியத்தை நன்கு அறிந்திருத்தல் அவசியமாகிறது.  





2 கருத்துகள்:

  1. மக்கள் தாங்கள் கற்கும் படிப்பினைகளை தங்கள் வாழ்வில் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும். விபத்தைப் பற்றிய செய்திகளைப் படித்து விட்டு, இது யாருக்கோ நடந்தது, என் வாழ்வில் இது மாதிரி நடக்காது என்று ஒவ்வொருவரும் திடமாக நம்பிக்கொண்டு விபத்தில் சிக்குகிறார்கள். இதுதான் ஏன் என்று புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியாக சொன்னீர்கள். ''இது யாருக்கோ நடந்தது, என் வாழ்வில் இது மாதிரி நடக்காது என்று ஒவ்வொருவரும் திடமாக நம்புவதுதான் பல விபத்துக்களுக்குக் காரணமாக அமைகிறது. சாலை விதிகளை மதித்து நடந்து, சரியான வேகத்தில் கவனமாக ஓட்டினால் விபத்து க்கள் நடக்காது.
      தங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி

      நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.