செவ்வாய், 31 டிசம்பர், 2013

சீட் பெல்ட்டுகள் உயிரிழக்கும் அபாயத்திலிருந்து 61% குறைக்கிறது.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும்12  லட்சத்திற்கும் அதிமானோர் சாலை வித்துக்களில் இறக்கிறார்கள்,.
இந்த சாலை விபத்துக்களால் கிட்ட தட்ட 5 கோடி பேருக்குமேல் காயமடைகிறார்கள் அல்லது ஊனமுற்றோராக ஆகிறார்கள்.

இந்த சாலை விபத்துக்களால் பாதிப்படைபவர்களில் பாதி பேர் பாதசாரிகள், சைக்கிளோட்டிகள் மற்றும் மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் ஓட்டிகள்.
சரியாக பயன்படுத்தப் படும் சீட் பெல்ட்டுகள் உயிரிழக்கும் அபாயத்திலிருந்து 61% குறைக்கிறது.

தலைக்கவசம் பயன்படுத்துவது தலைக்கு ஏற்படும் பெருங் காயங்களையும் உயிரிழப்புக்களையும் 45% அளவிற்கு குறைக்கிறது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சம்பந்தமான சட்டங்களை கடுமையாக்கினால் உலக அளவில் குடி சம்பந்தமான விபத்துக்களை 20% குறைக்கலாம்.

   ஒருமணிக்கு ஒரு கிலோமீட்டர் என்ற அளவில் வேகம் குறையும்போது விபத்துக்கள்      எண்ணிக்கை 2% குறையும் வாய்ப்புள்ளது

(உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளி விவரங்கள்)

சாலை பாதுகாப்பு வாரம் மறவாதீர்கள்

தேவையில்லாமல் ஆரனை ஒலிக்கச் செய்யாதீர்கள். 

இருசக்கர வாகனங்களில் எத்தனை பேர் செல்லலாம்
இப்படி அதிகம் பேர் செல்வது ஆபத்தானதுதானே! விபத்தை நாமே விலை கொடுத்து வாங்கலாமா??

-----------------------------------------------------------------------------------------------------------


சாலை விதிகளை கடைபிடியுங்கள் உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள


நாளை 1.1.2014 முதல் 7.1.2014 வரை நம் நாடு முழுவதும்  சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப் படுகிறது உங்கள் பங்குக்கு நீங்களும் ஏதாவது எழுதலாமே


__________________________________________________________________________________

திங்கள், 30 டிசம்பர், 2013

சாலை விபத்தில் இறப்பவர்கள் சுனாமியால் இறந்தவர்கள் எண்ணிக்கை போல 5 மடங்கு

சாலை அனைவருக்கும் பொதுவானது
மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்
வழி விடுங்கள்.
சாலையை பகிர்ந்து கொள்ளுங்கள்
2004 இல் ஏற்பட்ட சுனாமியால் உலகளவில் இறந்தவர்கள் எண்ணிக்கை;
2,30,00 பேர்
ஆனால் உலகில் சாலை விபத்துக்களால் ஒரு் வருடத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை;   12,00,000 
அதாவதுசுனாமியால்  இறந்தவர்கள் எண்ணிக்கையைப்போல 
5 மடங்குக்கு மேல்


''சிங்கப்பூரின் பாதுகாப்பான சாலைகள்'விழி ப்புணர்வு முகாமின் ஒரு பகுதியாக பாதுகாப்பு மாதம் 6-5-2013 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நம் நாட்டில் ஜனவரி மாதம் முதல் வாரத்தை மட்டுமே சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடி வருகிறோம்.

சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சாலை பாதுகாப்பில் ஒரு பங்கு இருக்கிறது. சாலைகள் மிகவும் அபாயகரமானவை என்பதை சிறு குழந்தைகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் அவர்கள் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் சாலையைக் கடக்கும் போது சாலைவிதிகளை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.  பெற்றோர்கள் சிறுவர்களுக்கு சாலைபாதுகாப்பு மாடல்களாக இருப்பது அவசியம். எல்லோரும் இணைந்து தம் பங்கிற்கு சாலை பாதுகாப்பிற்காக செய்யவேண்டியவற்றைச் செய்யவேண்டும் ஏனெனில் ஒவ்வொரு உயிரும் முக்கியமானதே!- சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு கவுன்சிலின் வேண்டுகோள்.

-----------------------------------------------------------------------------------------------------------

The essence of road safety is to live healthy
சாலை பாதுகாப்பின் சாராம்சம் - ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதே!

____________________________________________________________________________________________________________

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

சாலை -- உங்களுக்கு மட்டுமே சொந்தமானதா


சாலை உங்களுக்கு மட்டுமே  சொந்தமானதல்ல

சாலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

வாகன ஓட்டிகளே டூவீலர் ஓட்டுபவர்களோடு சாலையை 
பகிர்ந்து கொள்ளுங்கள்

ஒருமுறைக்கு இரு முறை பார்ப்பதால் ஓர் உயிரை காக்க முடியலாம்
கவனமாக பார்த்து ஓட்டுங்கள்.


சாலையில் மற்றவர்கள் மீதான கோபம் மரியாதைக்குறைவானது ஆபத்தானதும் கூட -- விட்டுவிடுங்கள்


சாலையில் செல்போன் பேசிக்கொண்டு நடப்பதே ஆபத்தானது என்றால் --
செல்போன் பேசிக்கொண்டே ரயில்வே லைனைக் கடப்பது 
மிக மிக ஆபத்தானது தானே மேலே உள்ள காணொளியைப் பாருங்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------
சாலை பாதுகாக்கு உங்களிடமிருந்தே ஆரம்பமாகட்டும்.

__________________________________________________________________________________


சனி, 28 டிசம்பர், 2013

உங்களால் மட்டுமே முடியும்சாலையில் மிகக்கவனமாக இருங்கள்
(நீங்கள் வாகனம் ஓட்டுபவராக இருந்தாலும்- பாதசாரியாக இருந்தாலும் கவனம் தேவை)


விபத்துக்களைக் குறைக்க உங்களால் மட்டுமே  முடியும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
குறுகிய பாலத்தில், சாலை வளைவுகளில் முந்தாதீர்கள்

_________________________________________________________________________________

விட்டுக்கொடுத்துப் போவது நன்மை தரும்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


''ஸ்டாப்'' அறிவிப்பு பலகையையே பார்க்காமல் ஓட்டினால் என்ன ஆகும்?

லெவல் கிராஸிங்கில் கதவு மூடப்பட்டிருந்தால் நின்று கதவு திறந்த பிறகு போகவும்
---------------------------------------------------------------------------------
விட்டுக்கொடுத்துப் போவது நன்மை தரும்
- இது சாலைக்கும்  பொருந்தும்

-------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 27 டிசம்பர், 2013

சாலை விபத்துக்கள் குறைய--

சாலை விபத்துக்கள் குறைய இவற்றைப் படியுங்கள்.

                             Safe ஆக இருக்க வழிகள்.


சாலை பாதுகாப்பு என்பது விபத்தில்லாத நிலையே
சாலை விபத்துக்கள் நடப்பதை இந்த வீடியோவில் பாருங்கள்

------------------------------------------------------------------------------------------------------------
 §  Slow down! Your family will be waiting for you.
வேகத்தைக் குறையுங்கள்- உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கிறது, 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 26 டிசம்பர், 2013

வாகனம் ஓட்டும் போது செல்போன் உபயோகிக்காதீர்கள்


வாகனத்தை ஓட்டும் போது செல் போன் மணியடித்தால் எடுக்காதீர்கள்
அழைப்பது எமனாகக்கூட இருக்கலாம்.
இந்த வீடியோவைப் பாருங்கள்நன்றி தினமலர்

--------------------------------------------------------------------------------------------------------------
வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவது மிகவும் ஆபத்தானது
-------------------------------------------------------------------------------------------------------------ஜனவரி முதல் தேதி முதல் ஏழாம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் மறவாதீர்கள்---  விபத்தைக் குறைப்பதில் உங்கள் பங்கு என்ன?

விபத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நடிகர் சூர்யாவின் பங்குசாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காக நடிகர் சூர்யா கூறுபவற்றைப் பாருங்களேன்.


நன்றி; நடிகர் சூர்யா, தினமலர்

சாலைவிபத்துக்களில் உயிரிழப்புக்கு நாம் காரணமாகலாமா?


விபத்துக்கள் கொடுமையானவை

ஒவ்வொரு வருடமும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சாலைவிபத்துக்களில் இறக்கிறார்கள். 
இதற்கு நாம் காரணமாகிவிடலாமா?
சாலை விதிகளை பின்பற்றி சரியான வேகத்தில் கவனமாக ஓட்டி விப்த்துக்களைக் குறைப்போம்.

-------------------------------------------------------------------------------------------------------------
§   Stay Alive – Think and Drive.
உயிரோடு வாழுங்கள்-- யோசித்து ஓட்டுங்கள். 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 25 டிசம்பர், 2013

பாதுகாப்பு முதலில்

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்


பத்திரமாக இருங்கள் வருத்தப்பட தேவையில்லை


பாதுகாப்பு முதலில்

-------------------------------------------------------------------------------------------------------------
வேகம் விவேகமல்ல-  சரியான வேகத்தில் ஓட்டுங்கள்

--------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 24 டிசம்பர், 2013

சாலை விதிகளைப் பின்பற்றுவீ ர்

சாலை விதிகளை மதித்து
அவற்றின்படி நடக்கவேண்டும்---------------------------------------------------------------------------------------------------------

§  If you want to stay married, divorce speed
-----------------------------------------------------------

திங்கள், 23 டிசம்பர், 2013

செல்ஃபோன் பயன்படுத்தாதீர்கள்


வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் பயன்படுத்தாதீர்கள்

செல் ஃபோன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் சாலை விபத்து ஏற்பட நான்கு மடங்கு வாய்ப்பு உள்ளது.
( ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகக் கடினம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)


------------------------------------------------------------------------------------------------------------
§                       
        Stop accidents before they stop you.
       விபத்துக்களை தடுத்திடுங்கள் அவை உங்களை                                                        தடுப்பதற்குமுன்
சாலைவிதிகளை பின்பற்றி சரியான வேகத்தில் கவனமாக ஓட்டி விபத்தினை குறைத்திடுங்கள்
------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சாலை பாதுகாப்பு - உங்களுக்காக

எப்போதும் கவனமாக இருங்கள்


உங்கள் பாதுகாப்புக்காக
விழிப்பாக இருங்கள்.

___________________________________________________________________________________

ஒரு போதும் முந்தும் வாகனத்தின் இடதுபுறமாக முந்தாதீர்கள்


______________________________________________________________________________________

சனி, 21 டிசம்பர், 2013

விபத்துக்கள் இல்லா நிலையே நம் குறிக்கோள்

சாலை விபத்துக்களைக் குறைப்போம்
நம் குறிக்கோள் ;  விபத்துக்களே இல்லை எனும் நிலை


பாதுகாப்பான ஓட்டுதல் இல்லை- வலியை அறிவீர்
பாதுகாப்பான ஓட்டும் முறையை அறிவீர் - வலியே இல்லை

___________________________________________________________________________________
ஒரு வாகனத்தின் பின் செல்லும் போது போதிய இடைவெளிவிட்டு  ஓட்டுங்கள்

___________________________________________________________________________________

சீட் பெல்ட் அணிவீர்

வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவீர்

சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து
சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.

உறுதிமொழி ஏற்போம்
மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கவே மாட்டேன். இது உறுதி

------------------------------------------------------------------------------------------------------------

சாலை வளைவுகளில் முந்தாதீர்

------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 20 டிசம்பர், 2013

சாலை நமக்கு மட்டும் சொந்தமல்ல


சாலை
             நமக்கு 
                        மட்டும் 
                                     சொந்தமல்ல
                                                              மற்றவருடன் 
                                                                                        பகிர்ந்து
                                                                                                      கொள்ளுங்கள்


பாதுகாப்பான வாகனம் ஓட்டும் முறையை பின்ற்றுவதால் சாலையில் நீங்கள் ஏற்படுத்தக் கூடிய நலன்களைப் பற்றி யோசியுங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
Safety is not automatic, think about it.
சாலை பாதுகாப்பு தானாக வருவதில்லை அதைப்பற்றி சிந்திப்பீர்..
_________________________________________________________________________________________

வியாழன், 19 டிசம்பர், 2013

தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு உடனடி தேவை


கிங் மேக்கர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 
''ஹெல் மெட் (தலைகவசம்) அணிதல் சிறப்பு முகாம்''
நடைபெற்றது.  இதற்காக வடபழனி பேருந்து நிலையம் அருகில் பல இடங்களில் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. இவை பலரது கவனத்தையும் நிச்சயம் கவர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 
இதே போல சாலை பாதுகாப்பு வாரத்தையும் சிறப்பாக் கொண்டாடலாமே.

வாகனத்தைக் கவனமாக ஓட்டி உயிரிழப்பைத் தவிர்ப்பீர்.

கவனமாக ஓட்டுவோம் உயிரிழப்பைத் தவிர்ப்போம்


ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேருக்கு மேல் சாலை விபத்துக்களில் இறக்கிறார்கள். கவனமாக ஓட்டி உயிரிழப்பைத் தவிர்ப்போம்

_________________________________________________________________________________

§  Leave sooner, drive slower, live longer.
§  சீக்கிரம் கிளம்புங்கள், மெதுவாக ஓட்டுங்கள், நீண்டகாலம் வாழுங்கள்
_____________________________________________________

புதன், 18 டிசம்பர், 2013

நிறுத்துக் கோட்டிற்கு முன் நிறுத்துங்கள்.


பாதசாரிகள் பாதுகாப்புக்கு


ஸீப்ரா க்ராசிங் பாதசாரிகளுக்கு மட்டும்
பாதசாரிகளை மதியுங்கள். 

நிறுத்துக் கோட்டிற்கு முன் வாகனத்தை நிறுத்துங்கள்

---------------------------------------------------------------------------------
§  The best drivers are aware that they must be beware
முன்ஜாக்கிரதையோடு கவனமாக இருக்க வேண்டும் என்று சிறந்த ஓட்டுனர்கள் அறிவார்கள் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 17 டிசம்பர், 2013

பாதுகாப்பான பயணத்திற்கு

வேகத்தைக் குறைப்பீர்--
உங்கள் பாதுகாப்பிற்காக


------------------------------------------------------------------------------------------------------------

Normal speed meets every need
சாதாரண வேகமே உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும்
-------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 16 டிசம்பர், 2013

வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும்,தொலைக் காட்சி சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை.   

வலைப் பதிவர்கள் அனைவரும் வரும் சாலை பாதுகாப்பு வாரத்தில் ‘சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு’’ ஏற்படுத்தும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு வழிகளை தங்கள் வலைத்தளங்களில் எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும். 

எனவே சாலை பாதுகாப்பு வாரம் முழுவதும் (1.1.2013 முதல் 7.1.2013 வரை) அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக் கொள்கிறேன். (அல்லது அவரவர் பதிவுகளின் கீழ் சாலை பாதுகாப்பு ஸ்லோகன்களை இடம் பெறச்செய்யலாம்)

இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்— நண்பர்களே உதவுவீர்களா?
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி  

(என் முந்திய வருடத்திய பதிவின்மறு பதிவு)

---------------------------------------------------------------------------------------------------------------------------------- Night doubles traffic troubles.

இரவு  போக்குவரத்து தொல்லைகளை இட்டிப்பாக்கும்

--------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

சாலை பாதுகாப்பு வாரம்

சாலை பாதுகாப்பு வார  சின்னம்    அகில இந்திய    
சாலை பாதுகாப்பு வாரம்
(1-1-2014 முதல் 7-1-2014 வரை)

சபதம் ஏற்போம்


சாலை பாதுகாப்பு தலைகவசம் அணிதல் விழிப்புணர்வு முகாம் சார்பில் அமைக்கப் பட்ட
 பேனர் பார்த்து பயன் பெறுக


பேனரில் எழுதப்பட்டுள்ள வாசகம்;--
உறுதிமொழி ஏற்போம்
''செல்லிடை பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க மாட்டேன்''

சனி, 8 ஜூன், 2013

காரில் சீட் பெல்ட் அணிவது அவசியம்

    இரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கு குழந்தை பிறந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அந்த பிறந்து மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையை தனி கார் சீட்டில் வைத்து தான் கூட்டிவர வேண்டுமாம். அந்த கார் சீட் பின் புறம் பார்த்தது போல இருக்கும். அதுவும் எப்படி- அக்குழந்தைக்கும் சீட் பெல்ட் அணிவித்திருக்க வேண்டும். இப்படி பிறந்த கைக்குழந்தைக்கே சீட் பெல்ட் போட வேண்டும் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

   இனியாவது கார்களில் பயணம் செய்பவர்கள் (கார் சீட் பெல்ட் இருக்கும் வண்டிகளிலாவது) சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வார்களா?

வியாழன், 6 ஜூன், 2013

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு ஸ்டாப் லைன்ஸ்டாப் லைன் எனும் நிறுத்தக் கோடு பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். அது பற்றி காவல் துறையினர் அதிக கவனம் செலுத்தியதாகத் தெரிய வில்லை. அதன் முக்கியத்துவம் காவல் துறையினருக்கே அதிகம் புரியவில்லை என்றே தோன்றுகிறது.

இப்பொழுது விடுமுறையில் அமெரிக்கா வந்துள்ளேன். இங்கு நிறுத்துக் கோட்டிற்கு முன் (முன்தான் அதைத் தாண்டியல்ல) எல்லா வாகனங்களும் கண்டிப்பாக நின்று செல்கின்றன. யாருமே கண்காணிக்காத இடமாக இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் யாரும் இந்த விதியை மீறுவதில்லை. இதற்கு காரணம் இங்குள்ளவர்களின் (இந்தியர்களையும் சேர்த்தே) கட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும் இதை மீறுபவர்களுக்கு விதிக்கப் படும் அபராதம் மிக மிக அதிகம் என்பதும் இன்னொரு காரணம். நிறுத்தக் கோட்டிற்கு முன் நிற்காத வாகன ஓட்டிகளுக்கு 214 டாலர் (11,812ரூ) சிகப்பு விளக்கை மதிக்காமல் ஓட்டுபவர்களுக்கு 436 டாலர் (24,067 ரூ) அபராதமாக விதிக்கப் படுகிறது.. இது தவிர அவர்கள் ஓட்டி வந்த வாகனத்திற்கான இன்ஸூரன்ஸ் கட்டணமும் அதிகமாகி விடும். எனவே வாகன ஓட்டிகள் இவ்விதிகளை கட்டாயமாக பின்பற்றுகிறார்கள்.

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு அல்லது விபத்தின் விளைவுகளைக் குறைப் பதற்கு இந்த நிறுத்தக்கோட்டில் நின்று செல்லும் பழக்கத்தை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தலாமே! தமிழகக் காவல்துறையினர் இதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

பாதுகாப்பான ஓட்டும் முறையைப் பயன்படுத்தி விபத்துக்களைக் குறைக்கலாம்


தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடந்த விபத்துக்களின் விவரம்
வாகனங்கள்
நடந்த விபத்துக்கள்
இறந்தவர்கள் எண்ணிக்கை
அரசுப் பேருந்துகள்
4378
1318
தனியார் பேருந்துகள்
3918
999
லாரிகள்/ட்ரக்குகள்
10556
3108
கார்/ஜீப்/ டேக்ஸி / டெம்போ
18248
3617
இருசக்கர வாகனங்கள்
19492
3652
மூன்று சக்கர வாகனங்கள்
3758
430
மற்றவை
5523
2088
மொத்த விபத்துக்கள்
65873
15422
வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பான ஓட்டும் முறையைப் பயன்படுத்தினால் விபத்துக்களைப் பெரும் அளவில் குறைக்கலாம்