செவ்வாய், 3 ஜனவரி, 2012

சாலை விதிளை மதித்து நடப்போம் விபத்தை தவிர்ப்போம்


சிக்னல் விளக்கு இருக்கக்கூடிய சாலை சந்திப்போ அல்லது சிக்னல் இல்லாத சாலை சந்திப்போ எதுவாக இருந்தாலும் ஸ்டாப் லைன்கள் போடப்பட்டிருக்கும். வாகனங்களை நிறுத்தும் போது அந்த ஸ்டாப் லைன்கள் முன்பாக வாகனங்கள் நிறுத்தப்பட  வேண்டும். ஆனால் நம் ஊர்களில் ஓட்டுனர்கள் அப்படி நிறுத்தாமல் ஸ்டாப் லைன்களைத் தாண்டிப் போய் நிறுத்துகிறார்கள். இப்படிச் செய்வது ஏதோ ஒரு சிலரல்ல பலர் இத்தவறைச் செய்கிறார்கள்.  அங்கிருக்கும் காவல் துறையினரோ இது பற்றி கண்டிப்பதும் இல்லை கண்டுகொள்வதும் இல்லை. அதனால் ஓட்டுனர்களுக்கு பயம் ஏதும் இல்லாமல் போய் எல்லா இடங்களிலும் தொடர்ந்து இதுபோன்ற தவறுகளைச் செய்கிறார்கள்.

அமெரிக்காவில் இதுபோன்ற ஸ்டாப் லைன்கள் இருக்கும் இடங்களில் வாகன ஓட்டிகள் நிச்சயமாக நிறுத்தியே செல்கிறார்கள். ஊரின் எந்தப்பகுதியில் ஸ்டாப் லைன்கள் இருந்தாலும் காவல்துறையினர் அங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது எந்த நேரமாக இருந்தாலும் ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை ஸ்டாப் லைனுக்கு முன்பாக நிறுத்தி இருபுறமும் பார்த்து பிறகே அதைக்கடந்து செல்கிறார்கள். பாதசாரிகள் யாராவது வருவதைப் பார்த்தால் அவர்கள் சாலையைக் கடந்து செல்ல அனுமதித்து அவர்கள் கடந்து சென்ற பிறகே அங்கிருந்து நகர்கிறார்கள்.

காவல் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து  இங்கும் ஓட்டுனர்கள் சரியாக ஸ்டாப் லைனில் நிறுத்திச் செல்ல வலியுறுத்த வேண்டும்: அப்படி நிறுத்தாத வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரயில்வே லெவல் கிராசிங்கில் கதவு மூடப்படும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் பொறுமையாக காத்திருப்பது இல்லை. கதவுக்கடியில் குனிந்து (அதைக்கடந்து) தங்கள் வாகனங்களை ஓட்டிச்செல்கிறார்கள். இது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள்வதில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் இவற்றை தவிர்ப்பது விபத்துக்களைப் பெரிதும் குறைக்கும்.

கவனமாக ஓட்டுவோம் விபத்துக்களக் குறைப்போம்

5 கருத்துகள்:

 1. கவன ஈர்ப்புப் பதிவு. ஆனால் இதுவரை யாரும் கவனிக்கவில்லையே? இவரகள் எப்படி சாலை விதிகளைக் கவனிப்பார்கள்?

  பதிலளிநீக்கு
 2. பின்னூட்டம் இடுவதற்கு தமிழில் தட்டச்சுகிறோம். அதை பிரசுரிப்பதற்கு ஆங்கிலத்திற்கு மாறவேண்டியுள்ளது. உங்கள் வாசகர்களுக்கு இந்த சிரமம் கொடுக்கலாமா?

  பதிலளிநீக்கு
 3. தொடர்ந்து எழுதுங்கள்.word verification ஐ நீக்கி விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. Palaniappan Kandaswamy said...
  தொடர்ந்து எழுதுங்கள்.word verification ஐ நீக்கி விடுங்கள்"

  தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி. word verification ஐ நீக்கிவிடுகிறேன்

  பதிலளிநீக்கு
 5. //ஓட்டுனர்களுக்கு பயம் ஏதும் இல்லாமல் போய் ..//

  இது இல்லாத வரை எந்த முன்னேற்றமும் நடக்கப் போவதில்லை.

  பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.