திங்கள், 2 ஜனவரி, 2012

ஓட்டுனர் தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள்

 சாலை விபத்துக்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் ஓட்டுனர்களால் ஏற்படும் விபத்துக்களே மிக அதிகமாக 80 சதவீதமாக உள்ளன. இதில் விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டுனர்கள் செய்யும் தவறுகள் 40 சதவீத அளவிற்கும், மற்ற வாகன்ங்களின் ஓட்டுனர்கள் செய்யும் தவறுகள் 40 சதவீத அளவிற்கும்,விபத்துக்களுக்குக் காரணமாகி விடுகின்றன.

வாகன ஓட்டிகளின் தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம். முன்னே செல்லும் வாகனத்தை இடைவெளியில்லாமல் மிக நெருக்கமாக பின் தொடர்வது ஒரு காரணம். சாலை விதிகளை மதிக்காமல் ஓட்டுவது.  முன் செல்லும் வாகனத்தை முந்தும் போது முறைப்படி ஓட்டாதது (தவறான ஓவர் டேகிங்)

எதிரே வரும் வாகனங்களுக்கு போதிய இடம்  தராமல் ஓட்டுவது. வாகனம் ஓட்டும் போது கவனக்குறைவாக இருப்பது. தூக்க கலக்கத்தில் அல்லது போதையில் வாகனத்தை ஓட்டுவது. வேகத்தடை இருக்கும் இட்த்தில் கூட வேகத்தைக் குறைக்காமல் ஓட்டுவது. 

முந்தக் கூடாத இடங்களில் குறிப்பாக வளைவுகளில் முந்துவது. இண்டிகேட்டர் விளக்குகள் சரியாகப் பயன்படுத்தாதது அல்லது சரியான சைகை காட்டாமல் வாகனம் ஓட்டுவது. இவற்றை  கவனத்தில் கொண்டு வாகனம் ஓட்டினால் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்பது உறுதி

8 கருத்துகள்:

 1. நல்ல பதிவு ஓட்டுனர்களின் செவிக்கு எட்டுமா ?

  பதிலளிநீக்கு
 2. sasikala said...
  நல்ல பதிவு ஓட்டுனர்களின் செவிக்கு எட்டுமா

  உங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி. நாம் எல்லோரும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால் அவர்களில் சிலராவது புரிந்துகொள்ள்மாட்டாகளா?

  பதிலளிநீக்கு
 3. rajvel said...
  நல்ல பதிவு
  Thank you for your visit to my blog and the encouragement words

  பதிலளிநீக்கு
 4. மரியாதைக்குரிய நண்பர்களே,இனிய வணக்கம். தங்களது பதிவு பரிசீலனைக்குரியது! விபத்துக்கு காரணம் ஓட்டுனர் மற்றும் இன்னும் கூடுதலான காரணங்கள் உள்ளன. வாருங்கள்! போக்குவரத்துக்கென விவாதக்குழு இணையத்திலேயே அமைப்போம்.ஓட்டுனர் சார்பாக நான் கலந்துகொள்கிறேன்.இதற்காகவே நான் driversindia.blogspot.com என்ற வலைப்பக்கத்தை உருவாக்கி உள்ளேன்.இந்த விவாதம் என்பது பேச்சாற்றலால் வெல்வது என்று எண்ணிவிடாமல் பரஸ்பரம் யார் அதிக தவறு செய்கிறார்கள்? அவர்களுக்கு தக்க அறிவுரை கொடுப்பது எவ்வாறு? என பல விழிப்புணர்வு விசயங்களை முன்வைத்து விவாதிப்போம்.தங்களது வருகைக்காக மற்றுமன்று இன்னும் பலதரப்பட்ட துறைகளைச்சார்ந்த,சமூக நல அமைப்புகள்,சமூக நல ஆர்வலர்கள்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள்,கல்வியாளர்கள்,மோட்டார் வாகன வல்லுனர்கள்,போக்குவரத்து சம்பந்தப்பட்ட துறைகள்,அதிகாரிகள்,நுகர்வோர் அமைப்புகள் என அனைவரும் கலந்து விவாதிக்கலாம்.தவறை திருத்தலாம்.மனித உயிர்களை காக்க முயற்சிக்கலாம்.எனது பிற வலைப்பக்கங்கள் 1)konguthendral.blogspot.com,2)tnsfsathy.blogspot.com,3)tntransport.blogspot.com,4)paramesdriver.blogspot.com மற்றும் எனது Face bookமுகவரி parameswaran driver இந்த வலைப்பக்கங்களிலும் வாருங்கள்,நம்மால் இயன்றளவு விழிப்புணர்வினைக் கொடுப்போம்.நன்றிங்க! என PARAMES DRIVER //THALAVADY - ERODE DISTRICT.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "விபத்துக்கு காரணம் ஓட்டுனர் மற்றும் இன்னும் கூடுதலான காரணங்கள் உள்ளன" இப்பதிவின் ஆரம்பத்திலேயே அதைச் சொல்லி இருக்கிறேனே.
   'ஓட்டுனர் தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள்' ஓட்டுனர் செய்யும் என்னென்ன தவறுகளால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றுதான் இப்பதிவில் குறிப்பிட்டு உள்ளேன். நன்றி வணக்கம்

   நீக்கு
 5. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. am athavan from sun news. i need ur contact number immdly for conducting special show about @accidents

   Tnk you,
   Aadhavan
   9894078292
   9025708095

   நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.