சனி, 7 ஜனவரி, 2012

ஒய் திஸ் கொலை வெறிசாலை பாதுகாப்பு வாரம் 7 ஆம் நாள்
ஒய் திஸ் கொலை வெறி
யாரும் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்துவதில்லைதான். ஆனால் செய்யக்கூடாதவற்றைச் செய்வதால்தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. ‘செயத்தக்க அல்ல செயக்கெடும்.. என்ற வள்ளுவரின் குறளை நினைவில் வைத்து கீழே உள்ளவற்றை கடைப்பிடித்தால் நிச்சயம் விபத்துக்கள் குறையும் இதில் சந்தேகமே இல்லை.
ஒரு போதும் வேகமாக ஒட்ட வேண்டாம்.
போதிய இடைவெளி இல்லாமல் ஒட்ட வேண்டாம்
குடித்துவிட்டு வாகனத்தை ஒட்ட வேண்டாம்
மழை, பனி நேரத்தில் வேகமாக ஒட்ட வேண்டாம்
வளைவுகளில் எப்போதும் முந்த வேண்டாம்
நிறுத்துக் கோட்டில் நிறுத்தாமல் ஒட்ட வேண்டாம்
சாலை விதிகளை மதிக்காமல் ஒட்ட வேண்டாம்
வேகத் தடைகளில் வேகத்தைக் குறைக்காமல் ஒட்ட வேண்டாம்
சாலையிலுள்ள அறிவிப்புகளை மீறி ஒட்ட வேண்டாம்
திரும்பும் முன் சைகை காண்பிக்காமல் திரும்ப வேண்டாம்
சிகப்பு விளக்கில் நிறுத்தாமல் போக வேண்டாம்

இவற்றைத் தெரிந்து கொண்டும் இவற்றை மீறி ஓட்டுகிறார்கள் என்றால் இவர்களுக்கு தங்கள் உயிர் மீதும் பயம் இல்லை மற்றவர்கள் உயிர் பற்றியும் கவலையில்லை என்றுதானே அர்த்தம்

8 கருத்துகள்:

 1. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு அவசியமான நேரத்தில். பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. ராஜி said...
  நல்லதொரு விழிப்புணர்வு பதிவு அவசியமான நேரத்தில். பகிர்வுக்கு நன்றி

  உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 3. உயிர்மீது ஆசை இருந்தாலும் அந்தநேர அவசரம்தான் இதற்கெல்லாம் காரணம்.கொஞ்சம் சுணங்குவதால் உலகம் நின்றுவிடப்போவதில்லை.உணர்ந்தால் நிறையவே விபத்துக்களைத் தவிர்க்கலாம் !

  பதிலளிநீக்கு
 4. ஹேமா said...
  உயிர்மீது ஆசை இருந்தாலும் அந்தநேர அவசரம்தான் இதற்கெல்லாம் காரணம்.கொஞ்சம் சுணங்குவதால் உலகம் நின்றுவிடப்போவதில்லை"

  மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்- நன்றி

  பதிலளிநீக்கு
 5. என்ன சொல்லி என்ன பயன்? மக்கள் மற்ற விபத்துகளைப் பார்த்தாவது திருந்தவேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. guna thamizh said...
  // தேவையான பதிவு//

  ஊக்குவிப்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 7. பழனி.கந்தசாமி said...
  // என்ன சொல்லி என்ன பயன்? மக்கள் மற்ற விபத்துகளைப் பார்த்தாவது திருந்தவேண்டும்//

  விபத்துகளைப் பார்த்து திருந்துகிறார்கள்.ஆனால் இது தற்காலிகமானதாகவே உள்ளது.திரும்பவும் பழைய நிலைக்குப் போய்விடுகிறார்கள்.திரும்பத்திரும் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.