Powered By Blogger

வெள்ளி, 30 மார்ச், 2012

மாநகர எல்லைக்குள் வாகனங்களின் வேகம்



மாநகர எல்லைக்குள் வாகனங்களின் வேகங்கள் எவை என்று போக்குவரத்துக் காவல்துறை அவர்களுடைய இணையதலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
Type of Vehicle
Day between 07.00 am and 10.00 pm
Autos  (ஆட்டோ)
25 Kms
Heavy Motor vehicles (கனரக வாகனம்)
35 Kms
Light Motor vehicles and Two wheelers
(வேன், கார் மற்றும் இருசக்கர  வாகனங்கள்) 
40 Kms
Type of vehicle
Night between 10.00 pm and 07.00 am
Autos (ஆட்டோ)
30 Kms
Heavy Motor vehicles (கனரக வாகனம்)
40 Kms
Light Motor vehicles and Two wheelers
(வேன், கார் மற்றும் இருசக்கர  வாகனங்கள்) 
50 Kms

திங்கள், 26 மார்ச், 2012

பாதசாரிகள் கவனத்திற்கு

ஆம்புலன்ஸ், ஃபயர் என்ஜின், போலிஸ் ,அல்லது மற்ற அவசரகால வாகனங்கள் அணைந்து எரியும் நீலவிளக்குடன் அல்லது சைரன் ஒலித்துக்கொண்டு வரும்போது அவற்றிற்கு வழிவிட்டு சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நில்லுங்கள்.

பேருந்துகள்:- பயணிகள் ஏற, இறங்க வசதியாக பேருந்து நின்ற பிறகே பேருந்தில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டும். பேருந்திலிருந்து இறங்கும்போது இரு சக்கர வாகனமோ அல்லது சைக்கிளோ வருகிறதா என்று பார்த்து இறங்க வேண்டும். ஒருபோதும் பேருந்திலிருந்து இறங்கியவுடன் பேருந்தின் பின்பக்கத்திலோ அல்லது முன்பக்கத்திலோ சாலையைக் கடக்க முயற்சிக்காதீர்கள். அந்தப் பேருந்து அங்கிருந்து நகர்ந்து இரண்டு பக்கமும் பார்க்க முடியும் வரை காத்திருங்கள்..

ரயில்வே லெவல் கிராஸ்; சிகப்பு விளக்கு எரியும் போது, மணி அடிக்கும் போது அல்லது கதவு மூடியிருக்கும் போது தண்டவாளத்தைக் கடக்காதீர்கள். மற்றுமொரு ரயில் வருகிறதென்றால் அலார்ம் ஒலி மாறும். சிகப்பு விளக்கோ, ஒலிக்கும் மணியோ அல்லது கதவு மூடாமலிருந்தாலோ இரண்டு புறமும் பார்த்து அவ்விடத்தைக் கடந்து  செல்லுங்கள்.

பாதசாரிகள் கடக்கும் பாதைக்கு வெளியே அல்லது நடந்து செல்லும் சப்வே,  நடந்து செல்லும் மேம்பாலத்தை உபயோகிக்காமல் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையைக்  கடக்காதீர்கள், அதுவே விபத்திற்குக்  காரணமாக அமையலாம் என்பதை மறக்காதீர்கள்.

நன்றி: சென்னை போக்குவரத்துக் காவல்துறை.

வெள்ளி, 16 மார்ச், 2012

விபத்துகள் குறையாதா?


உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள். ஆனால் மொத்த வாகனங்களில் ஒரு சதவீதம் கூட இந்தியாவில் இல்லை. வாகனங்கள் குறைவு, விபத்துகள் அதிகம். காரணம் விதிகளை மதிக்காத டிரைவர்கள், குடித்துவிட்டு ஓட்டுபவர்கள். 2010ம் ஆண்டில் மட்டும் 1.30 லட்சம் பேர் விபத்து காரணமாக இறந்து போயிருக்கிறார்கள். சாலை விதிகளை மதிக்காமல் மீறுவதில் இந்தியர்களை மிஞ்ச முடியாது. ஹெல்மெட் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் போடாமல் செல்வது, ஒன்வேயில் செல்வது, விடாமல் ஹாரன் அடித்து வெறுப்பேற்றுவது, குடித்து விட்டு ஓட்டுவது, முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல், பயிற்சியும் இல்லாமல் ஓட்டுவது என பல விதிமுறை மீறல்கள் நடக்கின்றன. வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு சாலை விதிகளை மீறுகின்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிகிறது. சாலையில் காரை ஓட்டிச் செல்வது சந்தோஷமான அனுபவமாக இருந்தது ஒரு காலம். இப்போது அது அபாயகரமான வேலையாகி விட்டது.

குடித்து விட்டு நிதானம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களால்தான் அதிகம் விபத்து நடக்கிறது. இப்படி விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது. இறப்பு, ஊனம், சேதம், வழக்கு செலவு என ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இது இரு மடங்கு அதிகரித்துள்ளது. சொகுசு வாகனங்கள், நல்ல சாலைகள் வந்தபிறகும் விபத்துகள் குறையாமல், அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 8 லட்சம் பேர் சாலை விதிகளை மீறியதற்காக அபராதம் செலுத்தியுள்ளனர். 

ஆனால் அபராத தொகை கடுமையாக இல்லாததால், மீண்டும் மீண்டும் விதிமீறல் நடக்கிறது. அரசு தரப்பிலும் விபத்தை குறைக்க நடவடிக்கை தேவை. 2011 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளை சாலை பாதுகாப்பு ஆண்டுகளாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஆனால் அது தொடர்பாக எந்த விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்படவில்லை. ஒரு விபத்தால் குறைந்தது 2 குடும்பங்கள் பாதிக்கின்றன. விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனையும் அபராதமும் இருந்தால் சாலை விபத்துகள் குறையும் என்கிறது சர்வதேச சாலை அமைப்பு.

நன்றி; தினகரன் தலையங்கம்
paaa

செவ்வாய், 6 மார்ச், 2012

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அதிகமாகிறது

"தவறு செய்பவர்களுக்கு சரியானதண்டனை கிடைக்க வேண்டும்" என்று சில நாட்களுக்குமுன் எழுதியிருந்தேன்.   


இதே கருத்து மத்திய அரசுக்கும் இருக்கிறது எனத்தெரிகிறது. அதனால்தானோ என்னவோ சாலையில் முதல் முறை செய்யும் தவறுக்கு 500 ரூபாய் அபராதமும் அதே தவறை திரும்பவும் செய்தால் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கலாம் என சட்ட்திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சட்டமுன் வடிவு இடையூறு இல்லாமல் பாராளுமன்றத்தில் நிறைவேறுமேயானால், அதை நம் காவல் துறையினரும் சரியான முறையில் அமுல்படுத்தினால் சாலையில் நடைபெறும் தவறுகள் பெரும் அளவில் குறையவும் அதனால் விபத்துக்கள் குறையவும் வாய்ப்புக்கள் உள்ளன. காவல் துறையினர் அதுவரை காத்திருக்காமல் இப்போதுள்ள அதிகாரத்தின் படி தவறு செய்பவர்களுக்கு அபராதம் விதித்து அதை முறைப்படி வசூலித்தால் நிச்சயமாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். செய்வார்களா?

வியாழன், 1 மார்ச், 2012

தவறு செய்பவர்களுக்கு சரியானதண்டனை கிடைக்க வேண்டும்


அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஓட்டுனரும், உடன் செல்பவரும் காரில் ஏறியவுடன் சீட் பெல்ட் அணிந்து கொள்கிறார்கள், சாலைவிதிகளை மதித்து நடக்கிறார்கள். அமெரிக்கவில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த நேரமாக இருந்தாலும் நிறுத்துக் கோட்டிற்கு (stop line) முன் வாகனத்தை நிறுத்தி இரு புறமும் பார்த்து பிறகு அங்கிருந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பாக தமிழ்நாட்டில் யாரும் சாலை விதிகளை கொஞ்சம்கூட மதிப்பதில்லை.  இங்குமட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?!

இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். விதிகளை மதிக்காமல் மீறுபவர்களுக்கு அந்த நாடுகளில் விதிக்கப்படுகின்ற தண்டனை மிக மிக அதிகம் அதிகமாக பைன் வசூலிக்கப்படுகிறது. . இந்தியாவில் அப்படியில்லை சாலை விதிகளை மீறுபவர்கள் பிடிக்கப் படுவதில்லை அப்படியே பிடித்தாலும் ஏதாவது வாங்கிக் கொண்டு விட்டுவிடுகிறாரகள். போலிஸ்கார்ர்கள் பல நேரங்களில் தவறு செய்பவர்களைப் பார்த்தாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்பதுகூட இல்லை.  


தவறு செய்பவர்களுக்கு சரியானதண்டனை கிடைப்பதில்லை. அதனால் யாருக்கும் பயம் சிறிதும் இல்லை.. மற்ற நாடுகளில் தவறு செய்தால் அபராதத்தொகை மிக அதிகமான அளவில் கட்டவேண்டுமே என்ற பயத்திலேயே தவறு செய்ய பயப்படுகிறார்கள். இதுதான் உண்மையான நிலை. எனவே இங்கும் அபராதத்தொகை அதிகமாக வசூலித்தால் வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகள்  நிச்சயமாக்க் குறையும்