Powered By Blogger

வியாழன், 2 ஜனவரி, 2014

‘’உயிரோடு இருங்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்’’

சாலை பாதுகாப்பு வாரம்
(இரண்டாம் நாள்)



24 ஆம் சாலைபாதுகாப்பு வாரம் 1.1.2014 அன்று துவங்கியது. 1.1.2014 முதல் 7.1.2014 வரையிலான சாலை பாதுகாப்பு வாரத்தின் மைய கருத்து ‘உயிரோடு இருங்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்கள்’’  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் உண்டாகும் இழப்புகளைப்பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இதன் முக்கிய நோக்கமாகும்

உலகிலேயே சாலைவிபத்துக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிக அதிகமாக உள்ளது.  2011 ஆம் ஆண்டில் 1,42,000 பேர் 4,90,000 சாலைவிபத்துக்களில் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.  அதாவது இந்தியாவில் கிட்டதட்ட ஒரு நிமிடத்திற்கு ஒரு விபத்து ஏற்படுகிறது, நான்கு நிமிடத்திற்கு ஒருவர் சாலை விபத்தால் இறக்கிறார். இந்தியாவில் இத்தகைய விபத்துக்களில் 24655 சாலை விபத்துக்கள் குடித்துவிட்டு ஓட்டுவதால் ஏற்படுகின்றன இவற்றால் 10.553 பேர் இறந்திருக்கிறார்கள் 21,148 பேர் படு காயமடைந்துள்ளார்கள்..  விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் கடுமையான நடவடிக்கை களாலும் இவ்விபத்துக்களை தடுக்கவேண்டும்.  நெடுஞ்சாலைகளுக்கருகில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றும்படி மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள் என்றும் மத்திய அரசின் அறிவிப்பு தெரிவிக்கிறது.



3 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.''அனைவரும் உணர வேண்டும்'' என்று சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் நன்றி.

      நீக்கு
  2. வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள விவரத்தைத் தெரிவித்த தங்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.