செவ்வாய், 23 டிசம்பர், 2014

மக்களைப் பார்க்கத்தான் போகிறேன் அவர்கள் என்னை வந்து பார்க்கும்படி வைத்துவிடாதேகலைவாணர் என் எஸ் கே யும், டீ ஏ மதுரமும் காரில் போய்க்கொண்டு இருந்தார்கள். கார் மிக வேகமாக ஓடிய போது கலைவாணர் ஓட்டுனரிடம், ‘’ராஜூ வேகமாகப் போகாதே, நான் மதுரை நிகழ்ச்சியில் மக்களைப் பார்க்கத்தான் போகிறேன். மக்களை என்னைப் பார்க்க வந்துவிட வைத்துவிடாதே;'''; என்று சொல்லி சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தார்கள்
.


இது மற்றவர்களுக்கும் பொருந்தும் வாகன ஓட்டுனர்களே நீங்களும் மற்றவர்களை வந்து உங்களைப் பார்க்கும்படி வைத்துவிடாதீர்கள். சரியான வேகத்தில்  கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள். 

ஓட்டுனர்களுக்கு இன்னும் சில குறிப்புகள்"--

Ø  வேகம் விவேகமல்ல – சரியான வேகத்தில் வாகனத்தை ஓட்டுங்கள். அதி வேகம் ஆபத்தானது. விபத்து ஏற்பட்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்
Ø  
சாலை விதிகளை கடைபிடியுங்கள்
Ø  
சீட் பெல்ட் அணிய மறக்காதீர்கள்.
Ø  
இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய மறக்காதீர்கள்.
Ø 
பாதசாரிகளுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை தாருங்கள். அவர்கள் பாதையைக் கடக்க வழி விடுங்கள்.
Ø 
வாகனத்தின் பின் புறம் உள்ள ரிஃப்லக்டர்கள் நல்ல நிலையில் இருக்கின்றனவா என சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
Ø  
குடி போதையில் வாகனம் ஓட்டாதீர்கள்
Ø
  வாகனத்தை உரிய நேரத்தில் பழுதுபார்த்து சரியான நிலையில் பராமரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
Ø  
போதுமான ஓய்வு எடுத்து வாகனத்தை ஓட்டுங்கள். இடையில் தூக்கம் வந்தால் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஓய்வெடுத்து ஓட்டுங்கள். 

2 கருத்துகள்:

  1. விவேகம் இல்லாமையே விபத்துகளுக்குக் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முற்றிலும் உண்மை ஐயா. ஓட்டுனர்கள் இதைப் புரிந்து நடந்து கொள்வது அவசியம்.

      நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.