வியாழன், 5 ஜனவரி, 2012

வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

சாலை பாதுகாப்பு வாரம்- 5 ஆம் நாள்
வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலைக் காட்சி சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை என்று எழுதியிருந்தேன்.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது – வலைப் பதிவர்கள் அனைவரும் ஒரே நாளில் இந்த சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு வழிகளை எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும் என்பதே அந்த யோசனை.
எனவே சாலை பாதுகாப்பு வார கடைசி நாளான 7-1-2012 அன்று அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்—உதவுவீர்களா?
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி  

(தயவு செய்து உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்)

18 கருத்துகள்:

 1. நான்காம் தேதி மாலை 7 மணிக்கு போட்ட பதிவிற்கு ஐந்தாம் தேதி மாலை 7 மணி வரை ஒரு பின்னூட்டம் கூட யாரும் போடவில்லை. இந்தப் பதிவர்கள் எல்லாம் சாலை பாதுகாப்பு பற்றி எழுதப் போகிறார்களாக்கும்? யாராவது சினிமாக்காரிக்கு காய்ச்சல்னா நூறு பதிவுகள் வந்துடும். பதிவுலகம் நீங்க நினைக்கற மாதிரி இல்லை அவைநாயகம்.

  என்னுடைய காட்டமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பதிவை என் இடுகையில் இடுகிறேன் - உங்கள் அனுமதியுடன்.

  பதிலளிநீக்கு
 4. தருமி said...

  நல்ல முயற்சி.
  சாலைகளில் சண்டை போட்டுப் பார்த்தும் பயனேதுமில்லை என்பது என் அனுபவம். சிறு வயதிலிருந்தே தவறான வழிகாட்டுதல்களே அதிகம்.

  நாம் மாறுவோமா ..?

  பதிலளிநீக்கு
 5. பழனி.கந்தசாமி said...
  நான்காம் தேதி மாலை 7 மணிக்கு போட்ட பதிவிற்கு ஐந்தாம் தேதி மாலை 7 மணி வரை ஒரு பின்னூட்டம் கூட யாரும் போடவில்லைள்
  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஆதங்கம் புரிகிறது.
  எனது வேண்டுகோள் இது. இதை ஏற்பது அவரவர் விருப்பம்

  பதிலளிநீக்கு
 6. .தருமி said...
  நல்ல முயற்சி

  உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி.
  ""உங்கள் பதிவை என் இடுகையில் இடுகிறேன்"" இது நல்ல செயல்தானே நன்றி

  பதிலளிநீக்கு
 7. "என்(ற) வார்த்தைகளுக்கு மரியாதை அளிக்க இப்பதிவு." என்ற .தருமி அவர்களுக்கு சல்யூட்.

  பதிலளிநீக்கு
 8. பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் எப்போதும் நம் மனதுக்குள் ஓடும் திமிர்த்தனமே முக்கிய காரணமாக ஓடுகிறது. செம egoists நாமெல்லோரும்!

  பதிலளிநீக்கு
 9. நானும் எனது பங்கிற்கு ஒரு பதிவை பதிந்துள்ளேன். ஊக்குவித்த உங்களுக்கு நன்றிகள் பல.

  http://sathyapriyan.blogspot.com/2012/01/blog-post_07.html

  பதிலளிநீக்கு
 10. நாகை சிவா said...
  என்னுடைய பங்காக வேகம் ரொம்ப முக்கியம்

  நன்றி பதிவிற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 11. SathyaPriyan said...

  நானும் எனது பங்கிற்கு ஒரு பதிவை பதிந்துள்ளேன்

  என் வேண்டுகோளை ஏற்று பதிவிட்ட அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 12. தருமி said...
  " பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் எப்போதும் நம் மனதுக்குள் ஓடும் திமிர்த்தனமே முக்கிய காரணமாக ஓடுகிறது. செம egoists நாமெல்லோரும்!"

  மிகச்சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஓட்டுனர்கள் மற்றவர்களை மதித்து நடக்க பழக வேண்டும்

  பதிலளிநீக்கு
 13. Hi, Though I am so late, the topic is eternally relevant. Can I write (near translate ) to my blog?
  Kindly let me know.

  http://www.dreamsapces.blogspot.com

  பதிலளிநீக்கு
 14. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். நீங்கள் இதை நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ளலாம்

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும், பதிவிற்கும் அழைப்பிற்கும் நன்றி

   நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.