Powered By Blogger

புதன், 4 ஜனவரி, 2012

பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் உதவ முன்வருவார்களா?


சாலை பாதுகாப்பு வாரம்  நான்காம் நாள்
பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் உதவ முன்வருவார்களா?

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தை      சாலை பாதுகாப்பு வாரம்’’ என அறிவித்து மாநில அரசுகளுடன் இணைந்து போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் கழகங்கள், காவல் துறை மூலமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பொது மக்களிடம் இந்த நற்பணி பற்றிய விவரம் சரியாக சென்றடையவில்லை என்றே தோன்றுகிறது.

இதற்குக் காரணம் பத்திரிகைகளும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இந்த சாலை பாதுகாப்பு வாரத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளாதது தான். ஒரு மோசமான விபத்து நடந்து விட்டால் அதைப்பற்றிய விவரங்களை புகைப்படங்களுடன் வெளியிட ஆர்வம் காட்டும் பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் இந்த சாலை பாதுகாப்பு வாரத்திற்கு முக்கியத் துவம் கொடுத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த முற்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

திருப்பங்களில், குறுகிய சாலைகளில், பாலங்களில் முந்தாதீர்கள்,
பேருந்து படிகளில் பயணம் செய்யாதீர்கள், (படியில் பயணம் நொடியில் மரணம்)
ஓடும் பேருந்தில் ஏறாதீர்கள், இறங்காதீர்கள்
குடித்துவிட்டு ஓட்டாதீர்கள்,
வாகனம் ஓட்டும் போது செல் ஃபோன் மணி அடித்தால் எடுக்காதீர்களை அழைப்பது எமனாகக்கூட இருக்கலாம்.
எப்போதும் கவனமாக ஓட்டுங்கள்.
அதிவேகம் ஆபத்தில் முடியும்.  போன்ற விழிப்புணர்வு வாசகங்களை பத்திரிகைகள் ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடலாம், தொலைக்காட்சி சேனல்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு இடையிலும் இடம் பெறச்செய்யலாம். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்களைக்கூட ஒளிபரப்பலாம்.

எல்லோரும் சேர்ந்து வடம் பிடித்தால்தான் தேர் நிலைக்குப் போய்ச் சேரும் இணைந்து செயல்பட முன்வருவார்களா?

2 கருத்துகள்:

  1. //சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்களைக்கூட ஒளிபரப்பலாம்.//

    சிறு வயதில் பார்த்த ஒரு படம் இன்னும் நினைவிலிருக்கிறது. சிறு வயதில் பிள்ளைகளுக்கு ஏற்ற முறையில் இதுபோன்ற படங்களைப் பள்ளிகளில் காண்பித்தால் மிக்க நலமாயிருக்கும்.

    DRO, காவல் துறையினரே இப்படங்களைத் தயாரிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. தருமி said...
    "DRO, காவல் துறையினரே இப்படங்களைத் தயாரிக்கலாம்".

    This is a good idea. And already there are some short films produced by Tamilnadu State transport Corporations and these can be shown either to public or school children

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.