திங்கள், 30 ஜனவரி, 2012

தேசீய நெடுஞ்சாலைகளில் வாகனங்களை முந்தும் முறை


பொதுவாக தேசீய நெடுஞ்சாலைகளில் ஒருவாகனத்தை முந்துவது என்பது   மிகச்சுலபமானது. ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்படியில்லை; இது மிகவும் ஆபத்தானது. காரணம் நம் முன்னே செல்லும் வாகனம் வலது பக்கமாகவே செல்லுமா? அல்லது இடது பக்கமாகவே செல்லுமா? அதன் ஓட்டுனர் வலது பக்கம் முந்துவதற்கு  அனுமதிப்பாரா? இடது பக்கம் முந்த அனுமதிப்பாரா? இவை எல்லாமே பின் வரும் வாகன ஓட்டிகளுக்கு புரியாதபுதிர்தான்!.

மற்ற நாடுகளில் எல்லா வாகனங்களும் (குறிப்பாக மெதுவாகச் செல்லும் வாகனங்கள்) இடதுபுற ஓரமாகச் செல்லும். அவற்றை முந்தும் வாகனங்கள் முன்னே செல்லும் வாகன ஓட்டியிடம் முந்த அனுமதி கேட்க வேண்டும். அவர் அனுமதித்த பிறகு வலது புற இண்டிகேட்டர் போட்டு, வலது பக்க பாதைக்குச் சென்று அந்த வாகனத்தை முந்த வேண்டும், முந்திய பிறகு இடது பக்க இண்டிகேட்டர் போட்டு, இடது பக்க பாதைக்குச் சென்று பயணத்தைத் தொடர வேண்டும்.

ஒவ்வொரு முறை முந்தும் போதும் இந்த முறைப்படிதான் முந்த வேண்டும். இது போல சரியான முறையில் முந்தினால் விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். ஒவ்வொரு முறை முந்தும் போதும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்ட வேண்டிய அவசியமில்லை. இந்த விதியை மீறுபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10 கருத்துகள்:

 1. தேவையான சாலை விதிகள் பதிவு.

  படம் போட்டு பாகங்கள் குறி மாதிரி ஒரு படம் போட்டு விளக்கியிருந்தீங்கன்னா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  அதென்னமோ தெரியல.வண்டி ஸ்டியரிங் புடிச்சதும் மனுசங்களுக்கு ஒரு கெத்து வந்துருது.அது ஏன் என்று தெரியவில்லை.ஒருவேளை வண்டியின் சுழற்சியோடு உடல் ரத்தத்தின் வேகம் அதிகரிக்கிறதோ?

  பதிலளிநீக்கு
 2. என்னது அவை நாயகனா!முதல் மந்திரி,பிரதமர் போன்ற கனவை இப்பவே அடைகாக்குறீங்களோ:)

  பதிலளிநீக்கு
 3. உங்க புரபைல் இப்பொழுதுதான் கண்டேன்.
  வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 4. ராஜ நடராஜன்Jan 30, 2012 03:09 AM

  // படம் போட்டு பாகங்கள் குறி மாதிரி ஒரு படம் போட்டு விளக்கியிருந்தீங்கன்னா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்//
  //என்னது அவை நாயகனா!// //வாழ்த்துக்கள்//

  ஒரு படம் போட்டு விளக்கலாம் என்பது நல்ல கருத்து முயல்கிறேன். சபா பதி என்பதே அவை நாயகன் என ஆனது.

  வாழ்த்துக்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. பழனி.கந்தசாமிJan 30, 2012 03:47 AM

  //நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்//


  தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 6. நமது சாலை பயணங்கள் எப்போதுமே பயங்கரமானதே அதுவும் விரைவு சாலைகளில் மாடுகள் முதல் மாக்கள் வரை கண்ணை மூடிக்கொண்டு கடக்கும் போது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் இங்கு எழுதமுடியாதவை.
  எனக்கு ஒரு சந்தேகம் இந்த பலதரப்பட்ட வண்டிகளின் Head Light உயரம் (ஆதாவது சாலையிலிருந்து)எவ்வளவு இருக்கவேண்டும் இதை யார் முறைப்படுத்துகிறார்கள்? இப்போதிருக்கும் வண்டிகளின் விளக்குகள் மேலும் கீழும் இருப்பதால் உயரம் குறைவாக இருக்கும் கார்களில் போகும் போது எதிர் திசையில் வந்து கண்ணை குருடாக்கும் அளவில் உள்ளதே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Taking the Connecticut laws regarding headlights, the specifications indicate that all motor vehicles, with the exception of motorcycles, must display two headlights with one on each side of the vehicle's front end. They should be mounted not more than 54 inches in height above the road's surface, and not any lower than 22 inches above the surface. RTO தான் இதை சரியாக இருக்கின்றன்வா என பார்க்க வேண்டும். நன்றி

   Read more: Automobile Headlight Specifications | eHow.com http://www.ehow.com/list_7176096_automobile-headlight-specifications.html#ixzz2GtRRHngj

   நீக்கு
 7. மனமாற்றம் ஒன்றினால்தான் விபத்துக்களை ஒழிக்க முடியும்...எனவேதான் சாலைகளை பற்றியும்... வாகனத்தை ஓட்டுதல் பற்றியும்....நிறைய செய்திகளை மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்............அப்படியானால் நிறைய விழிப்புணர்வு செய்திகள் வெளிவர வேண்டும்......  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனமாற்றம் ஒன்றினால்தான் விபத்துக்களை ஒழிக்க முடியும்...எனவேதான் நிறைய செய்திகளை மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.அப்படியானால் நிறைய விழிப்புணர்வு செய்திகள் வெளிவர வேண்டும்......'' மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி

   நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.