புதன், 26 மார்ச், 2014

வாகனங்கள் நிறுத்துக் கோட்டைத் தாண்டி நிறுத்தலாமா?

நிறுத்துக் கோட்டிற்கு முன் வாகனத்தை நிறுத்த வேண்டாமா???கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரம் சிக்னலில் இது வாடிக்கையாக நடக்கும் காட்சிதான்.  இப்படி பல சிக்னல்களில் நிறுத்தக் கோட்டிற்கு முன் வாகனங்கள் நிற்பதில்லை என்பதை முகநூல் (ஃபேஸ்புக்) வழியாக  போக்கு வரத்துக்காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.  (இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு போலிஸ்காரர் நிற்கும் போதே இப்படி நிறுத்துக் கோட்டைத் தாண்டி வாகனங்களை நிறுத்துகிறார்கள்.)

ஞாயிறு, 9 மார்ச், 2014

நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றிச் செல்லத் தடைவாகனங்களில், அதன் நீளத்தைத்தாண்டி நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றி செல்லும்போது, எதிர்பாராத விதமாக பிரேக் போட்டால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கம்பிகளில் குத்தி பரிதாபமாக பலியாகின்றனர். இதுபோன்ற வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவது ஒரு பக்கம் என்றால், முன்னால் செல்லும் கம்பி பாரம் ஏற்றிய வாகனம் மீது தங்கள் வாகனம் மோதி விடக்கூடாது என்ற பதற்றத்தில், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் இடது அல்லது வலதுபுறம் திரும்பும்போது, அதனாலும் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் கம்பிகள் ஏற்றிய லாரிகளால் எப்போதுமே தொல்லைதான்.