Powered By Blogger

ஞாயிறு, 9 மார்ச், 2014

நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றிச் செல்லத் தடை



வாகனங்களில், அதன் நீளத்தைத்தாண்டி நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றி செல்லும்போது, எதிர்பாராத விதமாக பிரேக் போட்டால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கம்பிகளில் குத்தி பரிதாபமாக பலியாகின்றனர். இதுபோன்ற வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவது ஒரு பக்கம் என்றால், முன்னால் செல்லும் கம்பி பாரம் ஏற்றிய வாகனம் மீது தங்கள் வாகனம் மோதி விடக்கூடாது என்ற பதற்றத்தில், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் இடது அல்லது வலதுபுறம் திரும்பும்போது, அதனாலும் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் கம்பிகள் ஏற்றிய லாரிகளால் எப்போதுமே தொல்லைதான்.


சாலை போக்குவரத்து விதி 93ன் கீழ் சரக்கு வாகனங்களில் பாடியின் விளிம்புகளை தாண்டி சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை ஏற்றி செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. இதுபோதாதா நம்மவர்களுக்கு? ஒரு மீட்டர் என்றால், ஒன்பது மீட்டர் என்று தாங்களே அர்த்தம் உருவாக்கிக் கொண்டு, கனரக வாகன ஓட்டுநர்கள் செயல்படுகின்றனர். இதை புரிந்துக் கொண்ட மத்திய அரசு தற்போது அந்த விதியை ரத்து செய்துள்ளது. அதாவது கனரக வாகனங்களின், பாடியின் நீளத்துக்கு தகுந்தாற்போல்தான் பொருட்களை எடுத்து செல்ல வேண்டும்.

2012ம் ஆண்டில் ஏற்பட்ட விபத்துகளில், 28,217 சம்பவங்கள், லாரிகளில் நீட்டிக் கொண்டிருந்த பொருட்களால் ஏற்பட்டுள்ளது. அந்த ஆண்டு சுமார் 9,100 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 சதவீத விபத்துகள் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளன.இதை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு  எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னர் விரைவாக செயல்பட்ட அரசு, கனரக வாகனங்களின் ‘நீட்டுதல்‘களுக்கு தடை விதித்துள்ளது.
Long steel bars in the truck to go into a dangerous manner prohibited by the federal government . This is welcome . This idea would have been , we could have prevented many of the surviving victims . Even though , in the case of delay , ஏற்கப்படக்கூடியதே . This scene can be seen on the roads at least once . Ie , Phulbani in the small vans , and its length is 4 times the size of the length of wire , rods , plates loaded , ground uraya , we are going to take uraya . வருபவர்களைப்பற்றி behind them, no worrie









7 கருத்துகள்:

  1. "
    "2012ம் ஆண்டில் ஏற்பட்ட விபத்துகளில், 28,217 சம்பவங்கள், லாரிகளில் நீட்டிக் கொண்டிருந்த பொருட்களால் ஏற்பட்டுள்ளது. அந்த ஆண்டு சுமார் 9,100 பேர் உயிரிழந்துள்ளனர்" இந்த முடிவை முன்னதாக எடுத்திருந்தால் எத்தனை உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். ?? அரசு இப்போதாவது உணர்ந்ததே என்ற உங்கள் கருத்துதான் சரி. ..

    பதிலளிநீக்கு
  2. அரசு மட்டுமல்ல மக்களும் உணர வேண்டும், இவ்வாறு பாதுகாப்பில்லாத முறையில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் விவரங்களை எடுத்து காவல்துறையினருக்கு அறிவிக்க வேண்டும், அதே போல ஊருக்குள் இவ்வாறு போவோரை அனுமதிக்கவும் கூடாது. நாம் ஒரு அடி முன்னே எடுத்து வைத்தால் அரசும் வைக்கும், இரண்டும் இணைந்தால் எதுவும் இயலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டும் இணைந்தால் எதுவும் இயலும் என்று மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். மக்களும் ஒத்துழைக்க வேண்டும். கருத்துப் பதிவிற்கு நன்றி

      நீக்கு
  3. பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

      நீக்கு
  4. தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.