Powered By Blogger

சனி, 14 ஏப்ரல், 2012

தமிழகத்தில் சாலைவிபத்து ஆண்டுக்கு இரண்டரை சதவீதம் அதிகரிப்பு



“இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்றன. ஆண்டுக்கு 66 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. ஆண்டுக்கு இது இரண்டரை சதவீதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

“இதற்கு பொதுமக்களிடையேயுள்ள சுயநலமே காரணம், மற்றவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு ஓட்டுனர்களிடையே வளரவேண்டும்
.
“தனியார் பேருந்து, வேன் உள்ளிட்ட போக்குவரத்து  ஊழியர்கள் சாலை விதிகளை பின்பற்றி செயல்படுவதில்லை. அவர்களுக்கு ஓய்வே கிடையாது. பணத்தை நோக்கமாகக் கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது.. மேனும் போதிய சாலை வசதிகள் இல்லாதது,   குறுகிய சாலைகள், வாகனப் பெருக்கம் உள்ளிட்டவையும் விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன” என்று. தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் சாலைவிபத்துக்களைக் குறைப்பதற்காக நடந்த கருத்தரங்கில் கூறினார்.

காவல்துறை பயிற்சிக் கல்லூரி டிஜிபி, “விபத்துக்களைக் குறைக்க சீட் பெல்ட், ஹெல்மெட் போன்றவற்றை கட்டாயம் அணியவேண்டும். விபத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. பள்ளிமாணவர் களிடம் இருந்து இந்த விழிப்புணர்வை கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் சிறுவயதிலேயே போக்குவரத்து விதிமுறைகள் தெரிய வரும்.. விபத்துக்களை முழுமையாகத் தடுக்க முடியும்” என்று கூறினார்.

கூடுதல் டிஜிபி கூறுகையில்,” 2009 ம் ஆண்டு நடந்த சாலைவிபத்துக் களில் 13,035 பேர் இறந்துள்ளனர். 2010 ம் ஆண்டு நடந்த விபத்தில் 15,240 பேர் இறந்துள்ளனர். என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக வேலூர், கடலூர், விழுப்புரம், சேலம், தஞ்சாவூர், கோவை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன” என்றார்
நன்றி தினகரன் செய்தி

.(விபத்துக்களுக்கான காரணங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது .தேவையான நடவடிக்கை எடுத்தால் நல்லது)