சாலை பாது காப்பு வாரம் எட்டாம் நாள்
சாலை பாதுகாப்பு வாரத்திற்கு ஏழு நாட்களே உண்டு. நேற்றோடு சாலை பாதுகாப்பு வாரம் முடிந்துவிட்டது. நம் மக்கள் முழு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வைப் பெற்றுவிட்டார்கள் என்று சொல்லும் ஒரு நாள் வர வேண்டும். அந்த நாளும் வந்திடாதா என்ற ஏக்கமே மிஞ்சுகிறது. அது ஒரு எட்டா(த) நாளாக ஆகிவிடக்கூடாது என்று வேண்டுகிறேன்.
இதற்காக என் வலைத்தளங்களில் எந்தப் பதிவு பகிர்ந்தாலும் அதன் கீழே ஒரு சாலை பாதுகாப்பு குறிப்பை வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். மற்ற வலைப் பதிவர்களும் இது போல செய்தால் அது சாலையைப் பயன் படுத்தும் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
மற்ற நண்பர்களிடமும் நான் இதை எதிர்பார்க்கலாமா?
கடந்த சில தினங்களாக நான் இட்ட பதிவுகளைப் படித்து பயன் அடைந்தவர்களுக்கும், என்னை ஊக்குவித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு
அவைநாயகன் எனும் நா.சபாபதி.
Chance takers are accident makers.
If you want to stay married, divorce speed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.