சாலை விபத்துக்கள் எண்ணிக்கை
விபத்துக்கான காரணம்
|
விபத்து எண்ணிக்கை
|
இறந்தவர் எண்ணிக்கை
|
ஓட்டுனர் தவறுகளால்
ஏற்படுபவை
|
61664
|
14347
|
பயணிகளின் தவறு
|
898
|
204
|
பாதசாரிகள் தவறு
|
1747
|
553
|
இயந்திரக் கோளாறு
|
112
|
34
|
சாலையில் குறைபாடு
|
472
|
108
|
பனி, மழை போன்றவை
|
63
|
9
|
மற்றவை
|
917
|
167
|
மொத்த விபத்துக்கள்
|
65873
|
15422
|
2011 ஆம் ஆண்டின்
இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இயந்திரக் கோளாறும், பனி, மழை போன்ற
காரணங்களும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான விபத்துக்களுக்கே காரணமாக அமைந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறையினர்
சாலைகளில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்தால் சாலைக் குறைபாடுகளால் ஏற்படும்
விபத்துக்களை தவிர்க்கலாம். வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது கவனமாக
இருந்தால் பயணிகளால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துவிட முடியும்.
சாலையைப் பயன்படுத்தும்
பாதசாரிகள் கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும் நடந்து சென்றால் அவர்களால் ஏற்படும்
விபத்துக்களையும் தவிர்த்துவிடலாம்.
இந்தப்
புள்ளிவிவரத்தின்படி கிட்டதட்ட 93 சதவீத விபத்துக்களுக்கு ஓட்டுனர்களே காரணமாக
இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே விபத்துக்களைக் குறைப்பதில் ஓட்டுனர்கள்
பங்கு பெருமளவில் இருக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே ஓட்டுனர்கள் எல்லா
சாலைவிதிகளையும் முறையாகக்கடைப்பிடித்து, எப்பொழு\தும் மிகக்கவனமாகவும், சரயான
வேகத்திலும் ஓட்டினால் நிச்சயமாக விப்துக்களைக் குறைத்துவிடலாம். குறைந்த பட்சம்
விபத்துக்களின் விளைவுகளையாவது குறைத்துவிட முடியும். ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.