Powered By Blogger

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

;நிறுத்தக் கோட்டிற்கு முன் நிறுத்துங்கள்

;நிறுத்தக் கோட்டிற்கு முன் நிறுத்துங்கள் 

விபத்துக்களைக் குறைத்திடுங்கள் 




1.   1.    ஒரு ஓட்டுனர் நிறுத்த அறிவிப்போ அல்லது நிறுத்தக்கோடோ உள்ள (சிக்னல் விளக்குகள் இல்லாத) சாலை சந்திப்பில மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு வாகனத்தைக் கண்டிப்பாக நிறுத்தவேண்டும்.
   2. எவ்வளவு அருகில் நிறுத்த முடியுமோஅந்த இடத்தில் ஆனால்
அ. நிறுத்தக் கோட்டை (stop line) அல்லது
ஆ. நிறுத்தக் கோடு இல்லாவிட்டாலும சாலை சந்திப்பை
     அடைவதற்கு முன்னால் ஓட்டுனர் வாகனத்தை கண்டிப்பாக நிறுத்த       
     வேண்டும்.

3.      ஓட்டுனர் இடதுபுறமோ அல்லது வலது புறமோ திரும்புகிறார் என்றாலோ அல்லது ‘யூ’டேர்ன் எடுத்து திரும்புகிறார் என்றாலோ அந்த சாலை சந்நிப்பில் அல்லது சாலைசந்திப்புக்கு அருகில் (ஓட்டுனர் வருகின்ற சாலையில்) ஏதேனும் பாதசாரி சாலையை அல்லது சாலையின் பகுதியைக் கடந்தாலோ கண்டிப்பாக பாதசாரி கடக்க வழிவிட வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 அமெரிக்காவில நான் பார்த்த வரையில் எந்த நேரமானாலும் (இரவு 12 மணியானாலும்), எந்த இடமானாலும் (கண்காணிப்பே இல்லாத இடமாக இருந்தாலும்) நிறுத்தக் கோட்டின் முன்னால் வாகனத்தை நிறுத்தி இருபுறமும் பார்த்து பிறகுதான் அதைத்தாண்டிச் செல்கிறார்கள். சாலையைக் கடக்க நிற்கும் பாதசாரிகளைப் பார்த்தால் பாதசாரி சாலையைக் கடந்த பிறகே அதைத் தாண்டிச் செல்கிறார்கள்.
இங்கோ யாரும் நிறுத்தக் கோட்டை மதிப்பதே இல்லை வாகனத்தை நிறுத்தக்கோட்டின் முன் நிறுத்துவதுமில்லை—காவல் துறையினர் இதைக் கண்டுகொள்வதும் இல்லை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.