Powered By Blogger

வெள்ளி, 18 ஜனவரி, 2013

இருசக்கர வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியவை




What to Do? (For Two Wheelers)
இரு சக்கர வாகன ஓட்டிகள் செய்ய வேண்டியவை
  • Always wear a full mask good quality helmet & fasten it.
  • எப்பொழுதும் நல்ல தரமான தலைக்கவசத்தை அணியவும்.
  • Always check the inflation of both front and rear tires.
  • எப்பொழுதும் முன், பின் சக்கர டயர்களின் காற்றழுத்தத்தை சரிபார்க்கவும்
  • Always ensure the front and rear lights are functional.
  • எப்பொழுதும் முன்புற மற்றும் பின்புற விளக்குகள் எரியும் நிலையில் வைத்திருக்கவும்
  • Always give proper indications before turning.
  • எப்பொழுதும் திரும்புவதற்கு முன் சரியான இன்டிகேட்டர் விளக்கோ, கை சிக்னலோ காட்டவும்
  • Keep a safe distance from the vehicle ahead.
  • முன் செல்லும் வாகனத்திற்கு போதிய இடைவெளி விட்டு செல்லவும்,
What NOT to Do? (For Two Wheelers)
இரு சக்கர வாகன ஓட்டிகள் செய்யக்கூடாதவை;
  • Never ride in a zig-zag manner.
  • ஒருபோதும் வளைந்து வளைந்து செல்லாமல் நேராகச் செல்லவும்
  • Never overtake from the blind corners of a vehicle or from the left side
  • எப்பொழுதும் இடது புறத்தில் முந்தாதீர்கள்.
  • Never apply brakes suddenly.
  • எப்பொழுதும் திடீரென்று பிரேக் போடாதீர்கள்.
  • Never carry heavy loads or more than one person as pillion rider.
  • எப்பொழுதும் அதிக பாரம் ஏற்றிச் செல்லாதீர்கள, ஒருவருக்குமேல் அதிக நபர்களை ஏற்றிச் செல்லாதீர்கள்.
  • Never use cell phone while riding.
  • ஓட்டும் போது செல் ஃபோன் பயன்படுத்தாதீர்கள்

வியாழன், 17 ஜனவரி, 2013

ஓட்டுனர்கள் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை

ஓட்டுனர்கள் சாலையில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை
Before Driving on Roads: சாலையில் வாகனத்தை ஓட்டத் துவங்கும் முன்

Please ensure to keep the following items before driving on roads in India:
சாலையில் வாகனம் ஓட்டத்துவங்கும் முன்கீழே உள்ளவை உங்களுடன் இருக்கிறதா என நிச்சயப் படுத்திக் கொள்ளவும.

  • Driving License  - ஓட்டுனர் உரிமம் 
  • Certificate of Insurance- இன்சூரன்ஸ் பணம் கட்டியதற்கான சர்ட்டிபிகேட்
  • Certificate of Registration- வாகனம் பதிவு செய்யப் பட்ட சர்ட்டிபிகேட்
  • Pollution Check Certificate - மாசு கட்டுப்பாட்டு வாரிய சர்ட்டிபிகேட்

What To Do? (For Four Wheeler)- 4 சக்கர வாகன ஓட்டுனர்கள் என்ன செய்ய வேண்டும்


  • Always Wear Seat belts & Ask Co-Passenger to do same.
  • எப்பொழுதும் சீட் பெல்ட் அணிய வேண்டும், உடன் பயணிப்பவரையும் அணியச் செய்ய வேண்டும். 
  • Always use Child seats for Children under 4+.
  • நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கான சீட் உபயோகிக்க வேண்டும்
  • Allow Pedestrians to Cross the Roads First.
  • பாதசாரிகள் முதலில் சாலையைக் கடக்க அனுமதிக்க வேண்டும்
  • Allow the Emergency Vehicles (Ambulance, Fire brigade) to pass.
  • ஆம்புலன்ஸ், தீயணைக்கும் படை வாகனம் போன்றவை முன்னே செல்ல அனுமதிக்க வேண்டும் 
  • Use Indicators & rear view mirrors when changing Lanes.
  • லேன் மாறும் போது இன்டிகேட்டர்களையும், ரியர் வியூ மிர்ரரையும் பயன்படுத்த வேண்டும்
  • Slow down while approaching an intersection.
  • சாலை சந்திப்பை நெறுங்கும் போது வேகத்தைக் குறைக்கவேண்டும்
  • Always maintain appropriate distance from the vehicle in front.
  • எப்பொழுதும் முன்னே செல்லும் வாகனத்திற்கு போதிய இடைவெளிவிட்டு வாகனத்தை ஓட்ட வேண்டும் 
  • Always drive in your lane.
  • எப்பொழுதும் உங்கள் லேனிலேயே ஓட்ட வேண்டுமெ 
What NOT To Do? (For Four Wheelers) (என்ன செய்யக்கூடாது 


  • Never Jump Any Red Light.
  • சிகப்பு விளக்கு எரியும் போது அதைத்தாண்டி செல்லக்கூடாது
  • Never Drink & Drive.
  • எப்போதும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது 
  • Never Use Mobile Phones when driving
  • வாகனம் ஓட்டும்போது எப்போதும் செல் போனைப் பயன்படுத்தக் கூடாது. 
  • Never Drive More than 60Kph in City.
  • ஒரு போதும் நகரத்திற்குள் 60 கி.மீ. வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது.  
  • Never Drive If you’re below age of 18.
  • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஒரு போதும் வாகனம் ஓட்டக்கூடாது 
  • Never Park on Busy Roads.
  • போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் வாகனத்தை நிறுத்தக்கூடாமு 
  • Never apply brakes suddenly
  • திடீரென ப்ரேக் போடக்கூடாது 

புதன், 16 ஜனவரி, 2013

சாலை விபத்துக்களில் ஓட்டுனர் பங்கு









சாலை விபத்துக்கள் எண்ணிக்கை
விபத்துக்கான காரணம்
விபத்து எண்ணிக்கை
இறந்தவர் எண்ணிக்கை
ஓட்டுனர் தவறுகளால் ஏற்படுபவை
61664
14347
பயணிகளின் தவறு
898
204
பாதசாரிகள் தவறு
1747
553
இயந்திரக் கோளாறு
112
34
சாலையில் குறைபாடு
472
108
பனி, மழை போன்றவை
63
9
மற்றவை
917
167
மொத்த விபத்துக்கள்
65873
15422


2011 ஆம் ஆண்டின் இந்தப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இயந்திரக் கோளாறும், பனி, மழை போன்ற காரணங்களும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான விபத்துக்களுக்கே காரணமாக அமைந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்தால் சாலைக் குறைபாடுகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம். வாகனங்களில் பயணம் செய்பவர்கள் பயணத்தின் போது கவனமாக இருந்தால் பயணிகளால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துவிட முடியும்.
சாலையைப் பயன்படுத்தும் பாதசாரிகள் கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும் நடந்து சென்றால் அவர்களால் ஏற்படும் விபத்துக்களையும் தவிர்த்துவிடலாம்.
இந்தப் புள்ளிவிவரத்தின்படி கிட்டதட்ட 93 சதவீத விபத்துக்களுக்கு ஓட்டுனர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே விபத்துக்களைக் குறைப்பதில் ஓட்டுனர்கள் பங்கு பெருமளவில் இருக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே ஓட்டுனர்கள் எல்லா சாலைவிதிகளையும் முறையாகக்கடைப்பிடித்து, எப்பொழு\தும் மிகக்கவனமாகவும், சரயான வேகத்திலும் ஓட்டினால் நிச்சயமாக விப்துக்களைக் குறைத்துவிடலாம். குறைந்த பட்சம் விபத்துக்களின் விளைவுகளையாவது குறைத்துவிட முடியும்.  ,

செவ்வாய், 15 ஜனவரி, 2013

விலைமதிப்பில்லாத உயிர்களைக் காக்க வாகனங்களை பத்திரமாக ஓட்டுங்கள்

தமிழ் புத்தாண்டு 
வாழ்த்துக்கள்


2011 ஆம் ஆண்டில் 1,36,834 பேர் சாலை விபத்தில்
இந்தியாவில் இறந்திருக்கிறார்கள்.
விலைமதிப்பில்லாத உயிர்களைக் காக்க
வாகனங்களை பத்திரமாக ஓட்டுங்கள் 

கொலைவெறி எதற்காக ?
யாரிடமும் கோபப் படாமல் 
பத்திரமாக வாகனத்தை 
ஓட்டுங்கள் 

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கல் நல் வாழ்த்துக்கள்


பொங்கல் நல் வாழ்த்துக்கள்




அனைவருக்கும் இதயம் கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்



எப்பொழுதும் சாலை விதிகளை கடைப்பிடித்து சரியான வேகத்தில் மிக்க் கவனமாக ஓட்டி விபத்தில்லா பயணம் மேற்கொள்வோம் 

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

;நிறுத்தக் கோட்டிற்கு முன் நிறுத்துங்கள்

;நிறுத்தக் கோட்டிற்கு முன் நிறுத்துங்கள் 

விபத்துக்களைக் குறைத்திடுங்கள் 




1.   1.    ஒரு ஓட்டுனர் நிறுத்த அறிவிப்போ அல்லது நிறுத்தக்கோடோ உள்ள (சிக்னல் விளக்குகள் இல்லாத) சாலை சந்திப்பில மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு வாகனத்தைக் கண்டிப்பாக நிறுத்தவேண்டும்.
   2. எவ்வளவு அருகில் நிறுத்த முடியுமோஅந்த இடத்தில் ஆனால்
அ. நிறுத்தக் கோட்டை (stop line) அல்லது
ஆ. நிறுத்தக் கோடு இல்லாவிட்டாலும சாலை சந்திப்பை
     அடைவதற்கு முன்னால் ஓட்டுனர் வாகனத்தை கண்டிப்பாக நிறுத்த       
     வேண்டும்.

3.      ஓட்டுனர் இடதுபுறமோ அல்லது வலது புறமோ திரும்புகிறார் என்றாலோ அல்லது ‘யூ’டேர்ன் எடுத்து திரும்புகிறார் என்றாலோ அந்த சாலை சந்நிப்பில் அல்லது சாலைசந்திப்புக்கு அருகில் (ஓட்டுனர் வருகின்ற சாலையில்) ஏதேனும் பாதசாரி சாலையை அல்லது சாலையின் பகுதியைக் கடந்தாலோ கண்டிப்பாக பாதசாரி கடக்க வழிவிட வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 அமெரிக்காவில நான் பார்த்த வரையில் எந்த நேரமானாலும் (இரவு 12 மணியானாலும்), எந்த இடமானாலும் (கண்காணிப்பே இல்லாத இடமாக இருந்தாலும்) நிறுத்தக் கோட்டின் முன்னால் வாகனத்தை நிறுத்தி இருபுறமும் பார்த்து பிறகுதான் அதைத்தாண்டிச் செல்கிறார்கள். சாலையைக் கடக்க நிற்கும் பாதசாரிகளைப் பார்த்தால் பாதசாரி சாலையைக் கடந்த பிறகே அதைத் தாண்டிச் செல்கிறார்கள்.
இங்கோ யாரும் நிறுத்தக் கோட்டை மதிப்பதே இல்லை வாகனத்தை நிறுத்தக்கோட்டின் முன் நிறுத்துவதுமில்லை—காவல் துறையினர் இதைக் கண்டுகொள்வதும் இல்லை



சனி, 12 ஜனவரி, 2013

சாலை பாதுகாப்புக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?





Pupils from St. Brigid’s and St. Mary’s Primary
School, Haddington Road, Dublin 4 pictured at 
The launch of the UN Decade of Action for Road Safety  2011-2020. 




இந்த சிறுவர்களுக்கு இருக்கும்
 அக்கறை உங்களுக்கு இல்லையா?


சாலை பாதுகாப்புக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
சாலையை பாதுகாப்பானதாக ஆக்குங்கள்







வெள்ளி, 11 ஜனவரி, 2013

முக்கியமான சாலை பாதுகாப்பு குறிப்புகள்




Few important Road Safety Tips are mentioned below:
1.     Don't use your mobile phone whilst driving
2.     Belt up in the back 
3.     Don't drink and drive 
4.     Always adhere to speed limits 
5.     Take special care about children, senior citizens and pedestrians. 
6.     Don't drive if tired. 
7.     Pedestrians should walk cautiously
8.     Always observe and anticipate other road users.
9.     Keep your distances
10.  Always wear helmets and seat belts



சில முக்கியமான சாலை பாதுகாப்பு குறிப்புகள்;
1.       வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் உபயோகிக்காதீர்கள்
2.       சீட் பெல்ட்களைப் பயன்படுத்துங்கள்
3.       குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்
4.    எப்பொழுதும் எங்கு வேகக்கட்டுப்பாடு இருந்தாலும் அதை மீறாதீர்கள்.
5.சிறுவர்கள், முதியோர் மற்றும் பாதசாரிகள் மீது அதிகம் கவனம் வையுங்கள்
6.       சோர்வாக உணர்ந்தால் வாகனம் ஓட்டாதீர்கள்.
7.       பாதசாரிகள் மிகக்கவனமாக நடக்க வேண்டும்
8. எப்பொழுதும் மற்ற சாலை பயன்படுத்துவோரை கவனித்து எதிர்பார்த்து ஓட்டுங்கள்.
9.   மிக நெருக்கமாக பின் தொடராதீர்கள், இடைவெளி விட்டு ஓட்டுங்கள்
10.   எப்பொழுதும் ஹெல்மெட்டும் சீட் பெல்ட்டும் அணியத் தவறாதீர்கள்.








வியாழன், 10 ஜனவரி, 2013

விபத்தின் விளைவுகள்

விபத்தின் விளைவுகள்



பெரம்பலூர் அருகே நின்றுகொண்டிருந்த பேருந்தில்
அதே திசையில் வந்த இன்னொரு பேருந்து மோத
ஐந்து பேர் இறந்து போனார்கள் பத்துக்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்

காரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட
வேறொரு விபத்தில் ஏற்பட்ட காயங்கள் 

புதன், 9 ஜனவரி, 2013

பாதுகாப்பாக பயணம் செய்வீர் நலமே வாழ்வீர்

சாலை பாதுகாப்பு

படியில் பயணம் -
ஆபத்தான பயணம்
மாணவர்களே யோசிப்பீர்

படியில் பயணம் செய்வதே ஆபத்தானது என்றால்
இது இன்னும் ஆபத்தானதே!!

ஆபத்தான பயணத்தை நீங்களே தேடிப்போவீர்களா?
பாதுகாப்பாக பயணம் செய்வீர்
நலமே வாழ்வீர்



செவ்வாய், 8 ஜனவரி, 2013

சாலை பாது காப்பு வாரம் எட்டாம் நாள்

சாலை பாது காப்பு வாரம் எட்டாம் நாள் 

சாலை பாதுகாப்பு வாரத்திற்கு ஏழு நாட்களே உண்டு.  நேற்றோடு சாலை பாதுகாப்பு வாரம் முடிந்துவிட்டது.  நம் மக்கள் முழு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வைப் பெற்றுவிட்டார்கள் என்று சொல்லும் ஒரு நாள் வர வேண்டும். அந்த நாளும் வந்திடாதா என்ற ஏக்கமே மிஞ்சுகிறது. அது ஒரு எட்டா(த)  நாளாக ஆகிவிடக்கூடாது என்று வேண்டுகிறேன்.

இதற்காக என் வலைத்தளங்களில் எந்தப் பதிவு பகிர்ந்தாலும் அதன் கீழே ஒரு சாலை பாதுகாப்பு குறிப்பை வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். மற்ற வலைப் பதிவர்களும் இது போல செய்தால் அது சாலையைப் பயன் படுத்தும் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 

மற்ற நண்பர்களிடமும் நான் இதை எதிர்பார்க்கலாமா?

கடந்த சில தினங்களாக நான் இட்ட பதிவுகளைப் படித்து பயன் அடைந்தவர்களுக்கும், என்னை ஊக்குவித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு
அவைநாயகன் எனும் நா.சபாபதி.


Chance takers are accident makers.
If you want to stay married, divorce speed