Powered By Blogger

வியாழன், 14 ஜனவரி, 2016

விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்காதீர்கள்


சாலை பாதுகாப்பு வாரம்
ஆறாம் நாள்

இந்திய சாலைகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் சாலை விபத்துக்களால் கொல்லப் படுகிறார்கள். இறந்து போனவர்களின் உறவினர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். விபத்தில் பாதிக்கப் பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்ற எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும்
. 

* விபத்தில் அடிபட்டவர்கள் குறுகிய நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதை மறவாதீர்கள்
விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்காதீர்கள்.




இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்
கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும்.




தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.
 விபத்தின் விளைவைக் குறைத்திடுங்கள்..




''போயிட்டு வரேன்'' என்று வீட்டில் சொல்லிவிட்டுக் கிளம்பும் நீங்கள் உங்கள் வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா?
********

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.
 அது உங்களுக்கும் நல்லது   சாலையைப் பயன்படுத்தும்  மற்றவர்களுக்கும் நல்லது.,





2 கருத்துகள்:

  1. விவேகம் வேண்டும், வேகம் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதி வேகம் ஆபத்தில் முடியும். சரியான வேகத்தில் ஓட்டுவதே பாதுகாப்பான ஓட்டுமுறை.வாகனத்திற்கு ஏற்ற வேகத்தில் ஓட்டவும். கிராம சாலையா, நகர சாலையா, மாநில நெடுஞ்சாலையா, தேசிய நெடுஞ்சாலையா என பார்த்து அந்த சாலைக்கு ஏற்ற வேகத்தில் ஓட்ட வேண்டும். போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில் வேகமாக ஓட்டக்கூடாது. நகரத்தில் அல்லது ஊருக்குள் செல்லும் போது வேகத்தைக் குறைக்க வேண்டும். பாலத்தில் அல்லது வளைவுகளில் போகும்போது வேகத்தைக் குறைத்து அதைத்தாண்டிய பிறகு சரியான வேகத்தில் ஓட்டலாம். ஒரு வாகனத்தைப்பின் தொடரும் போது முன்னே செல்லும் வாகனத்தின் வேகத்தில் தான் செல்லமுடியும். இவற்றையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு ஓட்டுவதுதான் பாதுகாப்பான ஓட்டும் முறை. நன்றி உங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி

      நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.