சாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.
திங்கள், 31 டிசம்பர், 2012
சனி, 29 டிசம்பர், 2012
வெள்ளி, 28 டிசம்பர், 2012
புதன், 26 டிசம்பர், 2012
செவ்வாய், 25 டிசம்பர், 2012
திங்கள், 24 டிசம்பர், 2012
ஞாயிறு, 23 டிசம்பர், 2012
சனி, 22 டிசம்பர், 2012
வியாழன், 20 டிசம்பர், 2012
பேருந்தின் படியில் நின்று பயணம் செய்யாதீர்
ஆவடி
பேருந்து நிலையத்தில் வைத்துள்ள அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்
சென்னை
மாநகர போக்குவரத்து
காவல்
ஆவடி சரகம்
படியில்
பயணம்
நொடியில்
மரணம்
புதன், 19 டிசம்பர், 2012
வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சாலை பாது காப்பு விழிப்புணர்வை
ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலைக் காட்சி
சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை. வலைப் பதிவர்கள் அனைவரும் வரும்
சாலை பாதுகாப்பு வாரத்தில் ‘’சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு’’ ஏற்படுaallfldlaaaத்தும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு
வழிகளை எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும்.
எனவே சாலை பாதுகாப்பு வாரம் முழுவதும் (1.1.2013 முதல் 7.1.2013 வரை) அனைத்து
பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும்
ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை
மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் முயற்சியால் ஒரேயொரு விபத்து
குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும்
சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்— நண்பர்களே உதவுவீர்களா?
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி
செவ்வாய், 18 டிசம்பர், 2012
வெள்ளி, 6 ஜூலை, 2012
சனி, 14 ஏப்ரல், 2012
தமிழகத்தில் சாலைவிபத்து ஆண்டுக்கு இரண்டரை சதவீதம் அதிகரிப்பு
“இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்றன. ஆண்டுக்கு 66 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. ஆண்டுக்கு இது இரண்டரை சதவீதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
“இதற்கு பொதுமக்களிடையேயுள்ள சுயநலமே காரணம், மற்றவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு ஓட்டுனர்களிடையே வளரவேண்டும்
.
.
“தனியார் பேருந்து, வேன் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்கள் சாலை விதிகளை பின்பற்றி செயல்படுவதில்லை. அவர்களுக்கு ஓய்வே கிடையாது. பணத்தை நோக்கமாகக் கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது.. மேனும் போதிய சாலை வசதிகள் இல்லாதது, குறுகிய சாலைகள், வாகனப் பெருக்கம் உள்ளிட்டவையும் விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன” என்று. தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் சாலைவிபத்துக்களைக் குறைப்பதற்காக நடந்த கருத்தரங்கில் கூறினார்.
காவல்துறை பயிற்சிக் கல்லூரி டிஜிபி, “விபத்துக்களைக் குறைக்க சீட் பெல்ட், ஹெல்மெட் போன்றவற்றை கட்டாயம் அணியவேண்டும். விபத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. பள்ளிமாணவர் களிடம் இருந்து இந்த விழிப்புணர்வை கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் சிறுவயதிலேயே போக்குவரத்து விதிமுறைகள் தெரிய வரும்.. விபத்துக்களை முழுமையாகத் தடுக்க முடியும்” என்று கூறினார்.
கூடுதல் டிஜிபி கூறுகையில்,” 2009 ம் ஆண்டு நடந்த சாலைவிபத்துக் களில் 13,035 பேர் இறந்துள்ளனர். 2010 ம் ஆண்டு நடந்த விபத்தில் 15,240 பேர் இறந்துள்ளனர். என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக வேலூர், கடலூர், விழுப்புரம், சேலம், தஞ்சாவூர், கோவை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன” என்றார்
நன்றி தினகரன் செய்தி
.(விபத்துக்களுக்கான காரணங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது .தேவையான நடவடிக்கை எடுத்தால் நல்லது)
வெள்ளி, 30 மார்ச், 2012
மாநகர எல்லைக்குள் வாகனங்களின் வேகம்
மாநகர எல்லைக்குள் வாகனங்களின் வேகங்கள் எவை என்று போக்குவரத்துக் காவல்துறை அவர்களுடைய இணையதலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
Type of Vehicle | Day between 07.00 am and 10.00 pm |
Autos (ஆட்டோ) | 25 Kms |
Heavy Motor vehicles (கனரக வாகனம்) | 35 Kms |
Light Motor vehicles and Two wheelers (வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள்) | 40 Kms |
Type of vehicle | Night between 10.00 pm and 07.00 am |
Autos (ஆட்டோ) | 30 Kms |
Heavy Motor vehicles (கனரக வாகனம்) | 40 Kms |
Light Motor vehicles and Two wheelers (வேன், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள்) | 50 Kms |
திங்கள், 26 மார்ச், 2012
பாதசாரிகள் கவனத்திற்கு
ஆம்புலன்ஸ், ஃபயர் என்ஜின், போலிஸ் ,அல்லது மற்ற அவசரகால வாகனங்கள் அணைந்து எரியும் நீலவிளக்குடன் அல்லது சைரன் ஒலித்துக்கொண்டு வரும்போது அவற்றிற்கு வழிவிட்டு சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நில்லுங்கள்.
பேருந்துகள்:- பயணிகள் ஏற, இறங்க வசதியாக பேருந்து நின்ற பிறகே பேருந்தில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டும். பேருந்திலிருந்து இறங்கும்போது இரு சக்கர வாகனமோ அல்லது சைக்கிளோ வருகிறதா என்று பார்த்து இறங்க வேண்டும். ஒருபோதும் பேருந்திலிருந்து இறங்கியவுடன் பேருந்தின் பின்பக்கத்திலோ அல்லது முன்பக்கத்திலோ சாலையைக் கடக்க முயற்சிக்காதீர்கள். அந்தப் பேருந்து அங்கிருந்து நகர்ந்து இரண்டு பக்கமும் பார்க்க முடியும் வரை காத்திருங்கள்..
ரயில்வே லெவல் கிராஸ்; சிகப்பு விளக்கு எரியும் போது, மணி அடிக்கும் போது அல்லது கதவு மூடியிருக்கும் போது தண்டவாளத்தைக் கடக்காதீர்கள். மற்றுமொரு ரயில் வருகிறதென்றால் அலார்ம் ஒலி மாறும். சிகப்பு விளக்கோ, ஒலிக்கும் மணியோ அல்லது கதவு மூடாமலிருந்தாலோ இரண்டு புறமும் பார்த்து அவ்விடத்தைக் கடந்து செல்லுங்கள்.
பாதசாரிகள் கடக்கும் பாதைக்கு வெளியே அல்லது நடந்து செல்லும் சப்வே, நடந்து செல்லும் மேம்பாலத்தை உபயோகிக்காமல் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையைக் கடக்காதீர்கள், அதுவே விபத்திற்குக் காரணமாக அமையலாம் என்பதை மறக்காதீர்கள்.
நன்றி: சென்னை போக்குவரத்துக் காவல்துறை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)