Powered By Blogger

வெள்ளி, 26 டிசம்பர், 2014

பாதுகாப்பு என்பது தானாக வருவதில்லை.


நார்மல் வேகம் என்பது எல்லா தேவைகளுக்கும் போதுமானது (Normal speed meets every need.)
·         மிகச்சிறந்த ஓட்டுனர்கள் அறிவார்கள்- அவர்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை. (The best drivers are aware that they must be beware)
·         வேகமாக ஓட்டுவதன் மூலம் உங்கள் சாவை சந்திக்கப் போகிறீர்கள் என்று தெரிந்தால் இன்னமும் இவ்வளவு வேகமாக ஓட்டுவீர்களா?
(If you know you are driving to your death –would you still drive so fast?)
·          
·         .நீங்கள் வீட்டிற்குப் போய்ச் சேர முடியாது – நீங்கள் பத்திரமாக உயிரோடு இல்லையென்றால் (You can’t get home, unless you’re safe )
·         இரவு போக்குவரத்துத் தொல்லைகளை இரட்டிப்பாக்கும் (Night doubles traffic troubles
·         வீட்டில் குழந்தைகளை கட்டிப் பிடித்துக் கொஞ்சுங்கள்.ஆனால் காரில் அவர்களை சீட் பெல்ட் அணிந்து அமரச் சொல்லுங்கள்   (Hug your kids at home, but belt them in the car )
·         பாதுகாப்பு என்பது தானாக வருவதில்லை. அதைப்பற்றி யோசியுங்கள்.
·         (Safety is not automatic, think about it.
·         சீக்கிரமாகக் கிளம்புங்கள், மெதுவாக ஓட்டுங்கள். அதிக காலம் உயிர் வாழுங்கள்.   (Leave sooner, drive slower, live longer )
·         வேகத்தைக் குறைத்து மெதுவாக ஓட்டுங்கள் – உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கிறது.  (Slow down! Your family will be waiting for you)

2 கருத்துகள்:

  1. நல்ல அறிவுரைகள். இவைகளை அறிந்திருந்தாலும் பலர் வாகனம் ஓட்டும்போது கடைப்பிடிப்பதில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயமாகும். நான் வாகனங்கள் ஓட்டும்போது எந்த நொடியும் விபத்து நேரிடலாம் என்ற உணர்வுடனேயே செல்கிறேன். ஒவ்வொரு முக்கிலும் யமன் ஒளிந்திருக்கிறான் என்ற உணர்வுடனேயே அந்த முக்குகளைக் கடக்கிறேன். எதிரில் வரும் வாகனங்கள் நம் வாகனத்தின் மீது எந்த நொடியிலும் மோதலாம் என்ற உணர்வு மிகவும் முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிந்திருந்தாலும் பலர் வாகனம் ஓட்டும்போது இவற்றை கடைப்பிடிப்பதில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்தான். இதனால் தான் இவற்றை நாம் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
      ''நான் வாகனம் ஓட்டும்போது எந்த நொடியும் விபத்து நேரிடலாம்'' என்ற உணர்வுடனேயே உங்களைப் போல் எல்லோரும் ஓட்டினால் விபத்துக்கள் ஏற்படாது. அப்படியே விபத்து நடந்தாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்காது.
      '''எதிரில் வரும் வாகனங்கள் நம் வாகனத்தின் மீது எந்த நொடியிலும் மோதலாம் ''' என்பதையும் எல்லோரும் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..
      மிக மிக மிக பயனுள்ள கருத்துக்கள்.

      நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.