இரு சக்கர வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்?
இரு சக்கர வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்?
வேறு எந்த வாகன போக்குவரத்தும் இல்லாத ஒரு மைதானத்திலோ அல்லது சர்க்கஸிலோ விளையாட்டு வீர்ர்கள் தங்கள் திறமையைக்காட்ட மிக அதிகமா ஆட்களை ஏற்றிச்சென்று பார்ப்பவர்களை திகைக்கச்செய்யலாம்.
ஆனால் இந்த சாகசங்களை போக்குவரத்து மிகுந்த சாலைகளில் செய்வது நியாயமில்லையே.
இரு சக்கர வாகனம் என்பது இருவர் பயணம் செய்வதற்காக உருவாக்கப் பட்டது. அதில் இருவருக்குமேல் பயணம் செய்வதே ஆபத்தானது என்றால் இவ்வளவு அதிகமானவர்கள் பயணம் செய்வது விபத்தை விளைக்கு வாங்குவது போன்ற செயலல்லவா? சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறையினர் சமூக அக்கறையோடு வெளியிட்டுள்ள இப்புகைப் படத்தைப் பாருங்கள். வரக்கூடிய ஆபத்தை உணருங்கள்.. இருசக்கர வாகனங்களில் அதிகமானவர்களை ஏற்றிச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.