சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும்.
எப்போதும் கவனம் சிதறாமல் ஓட்ட வேண்டும்
அகலமான சாலையில் மட்டுமே முந்த வேண்டும்
மற்ற வாகன ஓட்டிகளை மதித்து நடக்க வேண்டும்
மழை பனி நேரங்களில் வேகத்தைக் குறைக்க வேண்டும்
வேகத்தடையுள்ள இடத்தில் வேகத்தைக் குறைக்க வேண்டும்.
எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுத்து ஓட்ட வேண்டும்
வாகனத்தை முந்தும் போது வலது பக்கமாகவே முந்த வேண்டும்
நிறுத்துக் கோட்டிற்கு (stop Line) முன் வாகனத்தை நிறுத்த வேண்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்
என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,
நன்றி நன்றி நன்றி
இப்படிக்கு
அவை நாயகன்
வியபதி
இனிய பொங்கல் வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஹேமாJan 15, 2012 12:39 PM
பதிலளிநீக்கு"இனிய பொங்கல் வாழ்த்துகள் "
என் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
எல்லாம் சரி PTC அரசு வாகனம் பின்னால் வரும் போது இதெல்லாம் கடைபிடிக்கமுடியாதே!! இந்நிலை சென்னையில்.
பதிலளிநீக்குஅரசு வாகனம் பின்னால் வரும்போது நாம் ஒதுங்கி வழிவிட்டு விட்டு நாம் சாலை விதிகளை பின்பற்றி ஓட்டுவோம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
நீக்கு