Powered By Blogger

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சாலை பாதுகாப்பு வாரத்தின் குறிக்கோள் - விபத்துக்களே இல்லையெனும் நிலை

சாலை பாதுகாப்பு வார பதிவு தொடர்கிறது
தயவு செய்து கவனமாக ஓட்டுங்கள்.



பாதுகாப்பு என்பது A B C  என சொல்வது போல எளிமையானது
எப்பொழுதும் கவனமாக இருங்கள்

நமது குறிக்கோள் விபத்துக்களே இல்லை எனும் நிலையாக                        இருக்க வேண்டும்

 சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப் படுவதன் நோக்கம்;--

மக்கள் மத்தியில், பள்ளிகளில்,, கல்லூரிகளில் சாலைகளில், வேலை இடத்தில், சாலை பாதுகாப்பு வார பிரச்சாரம் மேற்கொள்ளப் படுவதன் குறிக்கோள்:--

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் சாலை விபத்துக்களை குறைப்பது, சாலை விபத்துக்களையும் அவற்றால் ஏற்படும் உயிர் இழப்புகளையும்  முழுவதுமாக தவிர்ப்பது,

அனைத்து சாலை பயன்படுத்துவோரையும் சாலை விதிகளை கடைபிடிக்கச் செய்வது, மற்றும் வாகனம் ஓட்டும் போது தலைக் கவசத்தையும், சீட் பெல்ட்டையும் அணியச் செய்வது,  

சாலைவிபத்து ஏற்படும் அபாயத்தையும், உயிரிழப்புக்களையும், காயங்கள் ஏற்படுவதையும் குறைக்கும் என்று நிரூபிக்கப் பட்டுள்ள புதிய பாதுகாப்பு முறைகளை அமுல் படுத்துவது,

சாலை விபத்துக்களைத்தடுக்க மக்களுக்கு வாகனங்களின் வேகக் கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது, .

ஒரு வாகனத்திற்கும் மற்றொரு வாகனத்திற்கும் இடையில் தேவையான இடைவெளி விட்டு வாகனம் ஓட்டுவது,,மற்றும் சரியான வேகத்தில் வாகனங்களை ஓட்டச் செய்வது

வாகனம் ஓட்டும் போது மது அருந்தியிருக்கக் கூடாது, தூக்க களைப்பாக இருக்கும் போது வாகனம் ஓட்டக் கூடாது, செல் போனை/ ரேடியோவைப் பயன் படுத்தக்கூடாது என்பனவற்றில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதூ ஆகியவையே.   

ஓட்டுனர்களும் பாதசாரிகளும் இவற்றையெல்லாம் அறிந்து வாகனத்தை ஓட்டினால் சாலை விபத்துக்கள் நிச்சயமாகக் குறையும் விபத்துக்களால் ஏற்படும் விளைவுகளும் குறையும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.