Powered By Blogger

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைத்திட உதவுங்கள்..







நான்கு ஐஐடி இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களுக்கு வேலை கிடைத்ததைக் கொண்டாடுவதற்காக சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குச் சென்றார்கள். 31.3.2014 அன்று அவர்கள் சென்ற இனோவா கார் சாலைவிபத்துக் குள்ளானதில் அந்த நான்கு மாணவர்களும் பலத்த காயமடைந்தார்கள். 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியும்
அவர்களுக்கு (மருத்துவ) உதவி கிடைக்காத்தால் அந்த நால்வரும் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். 

விபத்து நடந்த சில நிமிடங்களில் அவர்களை மருத்துவ மனையில் சேர்த்திருந்தால் அவர்களது உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும். இந்த சம்பவத்திலிருந்து சாலை விபத்துக்கள் எவ்வளவு கொடுமையானவை என்று நன்கு புரியும். இந்திய சாலைகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் சாலை விபத்துக்களால் கொல்லப் படுகிறார்கள். இறந்து போனவர்களின் உறவினர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். விபத்தில் பாதிக்கப் பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்ற எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும். 

* விபத்தில் அடிபட்டவர்கள் குறுகிய நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதை மறவாதீர்கள். 
விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்காதீர்கள்.




2 கருத்துகள்:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.