நிறுத்துக் கோட்டிற்கு முன் வாகனத்தை நிறுத்த வேண்டாமா???
கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரம் சிக்னலில் இது வாடிக்கையாக நடக்கும் காட்சிதான். இப்படி பல சிக்னல்களில் நிறுத்தக் கோட்டிற்கு முன் வாகனங்கள் நிற்பதில்லை என்பதை முகநூல் (ஃபேஸ்புக்) வழியாக போக்கு வரத்துக்காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். (இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு போலிஸ்காரர் நிற்கும் போதே இப்படி நிறுத்துக் கோட்டைத் தாண்டி வாகனங்களை நிறுத்துகிறார்கள்.)
ஒவ்வொரு முறையும் அவர்கள் சொல்லும் பதில் அப்படி நிற்காத வாகன ஓட்டிகள் மேல் நடவடிக்கை எடுக்கிறோம், அபராதமும் வசூலிக்கிறோம் என்று சொல்கிறார்கள். அப்படி நடந்திருந்தால் இப்படிப் பட்ட தவறுகள் குறைந்திருக்க வேண்டுமே! அப்படி குறைந்த தாகத் தெரிய வில்லை. இனியாவது நிறுத்துக் கோட்டிற்கு முன் வாகனங்களை நிறுத்தாமல் சென்றால்உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முன் வருவார் களா?
காவல்துறை அங்கேயே இருந்து கொண்டு இப்படி என்றால்... ம்ஹீம்...
பதிலளிநீக்குபதிவிட்ட உடனேயே இதனைப் படித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்கு