விபத்துக்கான காரணங்கள்
சாலை விபத்துக்களுக்கு கீழே உள்ள பல காரணங்கள் இருக்கின்றன.:
- வாகன ஓட்டிகளின் தவறுகள்
- சாலையைப் பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டிகளின் தவறுகள்
- ஓட்டுனருடன் இருக்கும் நடத்துனர், உதவியாளர் போன்றோர் செய்யும் தவறுகள்.
- வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகள் செய்யும் தவறுகள்.
- சாலையைப் பயன்படுத்தும் பாதசாரிகள் செய்யும் தவறுகள்.
- வாகனத்தில் ஏற்படும் கோளாறுகள்
- பிற வாகனங்களில் ஏற்படும் கோளாறுகள்
- சாலைகளில் உள்ள குறைபாடுகள்.
- சாலையைப் பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகள்.
- சாலையில் திரியும் கால்நடைகள்.
- தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள்.
- போதிய வெளிச்சம் இல்லாமை
இந்தக் காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். போதிய வெளிச்சம் இல்லாமை எப்படி விபத்துக்களுக்குக் காரணமாக அமைகின்றன? பகல் நேரத்தில் சாலையிலுள்ளவை அனைத்தும் தெளிவாகத் தெரிவதால் சுலபமாக வாகனங்களை ஓட்ட முடியும். ஆனால் இரவு நேரத்திலோ எங்கும் இருட்டாக இருப்பதால் வாகனத் தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்திலேயே ஓட்ட வேண்டும். எனவே போதிய வெளிச்சமின்மையால் மிகக்கவனமாகவே ஓட்டவேண்டும். விடியல் காலை நேரத்திலும், மாலை அந்தி சாயும் நேரத்திலும் நாம் கவனமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு சென்றாலும் எதிரே வருபவர் விளக்கை எரியவிடாமல் வரக்கூடும்.. அதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உண்டு.
தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி விபத்துக்களுக்குக் காரணமாக அமைகின்றன? பனி பெய்யும் நேரத்தில் சாலை பனியால் முழுமையாக மறைக்கப்படும் ஆபத்து உண்டு. விமான ஓடுதளம் பனி நேரத்தில் சரியாகத்தெரியாததால் விமானங்கள் ரத்து செய்யப்படு வதை பார்க்கிறோம். பாதை தெரியாத அது போன்ற நேரங்களில் மிக மிகக் கவனமாக ஓட்டுவது அவசியம்.
அடுத்து மழை விபத்துக்கு ஒரு பெரிய காரணமாக அமைகிறது. மழை பெய்யும் நேரங்களில் என்ன தான் வைப்பர்கள் வேலை செய்தாலும்கூட ,பாதை முழுவதும் சரியாகத் தெரியாது. எதிரே வரும் வாகனங் களையோ பாதசாரிகளையோ சரியாகப்பார்க்க முடியாது அதுவும் கனமழையாக இருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். எனவே மழை பெய்யும் நேரங்களில் பாதுகாப்பான வேகத்தில் கவனமாக ஓட்டவேண்டியது அவசியம்.. மழை நேரங்களில் ஏன் வேகமாகப் போகவில்லை என கேட்கமாட்டார்கள். மாறாக இவ்வளவு மழையிலும் நம்மை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தாரே என்றுதான் சொல்வார்கள். எனவே குறைவான வேகத்தில் கவனமாக ஓட்டுவதே சிறந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.