ஆம்புலன்ஸ், ஃபயர் என்ஜின், போலிஸ் ,அல்லது மற்ற அவசரகால வாகனங்கள் அணைந்து எரியும் நீலவிளக்குடன் அல்லது சைரன் ஒலித்துக்கொண்டு வரும்போது அவற்றிற்கு வழிவிட்டு சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நில்லுங்கள்.
பேருந்துகள்:- பயணிகள் ஏற, இறங்க வசதியாக பேருந்து நின்ற பிறகே பேருந்தில் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டும். பேருந்திலிருந்து இறங்கும்போது இரு சக்கர வாகனமோ அல்லது சைக்கிளோ வருகிறதா என்று பார்த்து இறங்க வேண்டும். ஒருபோதும் பேருந்திலிருந்து இறங்கியவுடன் பேருந்தின் பின்பக்கத்திலோ அல்லது முன்பக்கத்திலோ சாலையைக் கடக்க முயற்சிக்காதீர்கள். அந்தப் பேருந்து அங்கிருந்து நகர்ந்து இரண்டு பக்கமும் பார்க்க முடியும் வரை காத்திருங்கள்..
ரயில்வே லெவல் கிராஸ்; சிகப்பு விளக்கு எரியும் போது, மணி அடிக்கும் போது அல்லது கதவு மூடியிருக்கும் போது தண்டவாளத்தைக் கடக்காதீர்கள். மற்றுமொரு ரயில் வருகிறதென்றால் அலார்ம் ஒலி மாறும். சிகப்பு விளக்கோ, ஒலிக்கும் மணியோ அல்லது கதவு மூடாமலிருந்தாலோ இரண்டு புறமும் பார்த்து அவ்விடத்தைக் கடந்து செல்லுங்கள்.
பாதசாரிகள் கடக்கும் பாதைக்கு வெளியே அல்லது நடந்து செல்லும் சப்வே, நடந்து செல்லும் மேம்பாலத்தை உபயோகிக்காமல் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையைக் கடக்காதீர்கள், அதுவே விபத்திற்குக் காரணமாக அமையலாம் என்பதை மறக்காதீர்கள்.
நன்றி: சென்னை போக்குவரத்துக் காவல்துறை.
பாதசாரிகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய சூழ்நிலை எல்லா இடங்களிலும் இருக்கிறது. பஸ் ஸ்டேண்டில் நிற்கும் பயணிகளை இரு சக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள், ஏன் பஸ்கள்கூட மேலுலகத்திற்கு அனுப்பி வைக்கத் துடிக்கின்றன. ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் முக்தி அடையவேண்டியதுதான்.
பதிலளிநீக்குபழனி.கந்தசாமி
பதிலளிநீக்கு"பாதசாரிகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய சூழ்நிலை எல்லா இடங்களிலும் இருக்கிறது"
நீங்கள் மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். எல்லா இடங்களிலும் பாதசாரிகள் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையே நிலவிவருகிறது. பாதசாரிகள் இதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். வாகன ஓட்டுனர்கள்கூட வாகனத்தைவிட்டு இறங்கும் போது பாதசாரிகள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது.