Powered By Blogger

வியாழன், 1 மார்ச், 2012

தவறு செய்பவர்களுக்கு சரியானதண்டனை கிடைக்க வேண்டும்


அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஓட்டுனரும், உடன் செல்பவரும் காரில் ஏறியவுடன் சீட் பெல்ட் அணிந்து கொள்கிறார்கள், சாலைவிதிகளை மதித்து நடக்கிறார்கள். அமெரிக்கவில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த நேரமாக இருந்தாலும் நிறுத்துக் கோட்டிற்கு (stop line) முன் வாகனத்தை நிறுத்தி இரு புறமும் பார்த்து பிறகு அங்கிருந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பாக தமிழ்நாட்டில் யாரும் சாலை விதிகளை கொஞ்சம்கூட மதிப்பதில்லை.  இங்குமட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?!

இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். விதிகளை மதிக்காமல் மீறுபவர்களுக்கு அந்த நாடுகளில் விதிக்கப்படுகின்ற தண்டனை மிக மிக அதிகம் அதிகமாக பைன் வசூலிக்கப்படுகிறது. . இந்தியாவில் அப்படியில்லை சாலை விதிகளை மீறுபவர்கள் பிடிக்கப் படுவதில்லை அப்படியே பிடித்தாலும் ஏதாவது வாங்கிக் கொண்டு விட்டுவிடுகிறாரகள். போலிஸ்கார்ர்கள் பல நேரங்களில் தவறு செய்பவர்களைப் பார்த்தாலும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்பதுகூட இல்லை.  


தவறு செய்பவர்களுக்கு சரியானதண்டனை கிடைப்பதில்லை. அதனால் யாருக்கும் பயம் சிறிதும் இல்லை.. மற்ற நாடுகளில் தவறு செய்தால் அபராதத்தொகை மிக அதிகமான அளவில் கட்டவேண்டுமே என்ற பயத்திலேயே தவறு செய்ய பயப்படுகிறார்கள். இதுதான் உண்மையான நிலை. எனவே இங்கும் அபராதத்தொகை அதிகமாக வசூலித்தால் வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகள்  நிச்சயமாக்க் குறையும்

4 கருத்துகள்:

  1. சரியான கருத்துக்கள். பணம் கொடுக்கும் போதாவது விதிகள் நினைவிற்க்கு வந்தால் நல்லது தானே.

    நீங்கள் உங்கள் அலுவலுக அனுபவங்களை பற்றி எழுதினால் , தெரிந்து கொள்ள முடியும். ஏதோ, சாலையில் நிற்கும் அதிகாரிகள் எல்லாருமே பணம் பறிப்பது போல , வாகன ஓட்டிகளிட்ம ஒரு இமேஜ் , அவர்கள் தவறுக்கு மற்றவர் மீது பழி!

    பதிலளிநீக்கு
  2. பழனி.கந்தசாமிMar 1, 2012 04:27 AM
    //உண்மை//

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. VetrimagalMar 1, 2012 09:46 PM
    //சரியான கருத்துக்கள். பணம் கொடுக்கும் போதாவது விதிகள் நினைவிற்க்கு வந்தால் நல்லது தானே//

    மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், என் மகன் வீட்டைவிட்டு 100 அடி கூட போகாத நிலையில் அவரைப் பிடித்து zigzag driving என்று சொல்லி பணம் வாங்கியிருக்கிறார் ஒரு காவல்துறை அதிகாரி. இதற்கு பயந்து கொண்டே இப்போது எங்கு போனாலும் ஹெல்மெட்டும் பேப்பர்களும் இல்லாமல் வெளியே போவதில்லை.இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதானே

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.