Powered By Blogger

புதன், 20 ஆகஸ்ட், 2014

சாலை பாதுகாப்பு உங்களிடமிருந்தே துவங்குகிறது.

சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதில் காவல் துறையின் பங்கு

முகநூலில் ''சென்னை சிட்டி ட்ராஃபிக்  போலிஸ்'' (சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை)  என்ற பகுதியில் போக்குவரத்துத் துறை சம்பந்தமான புகார்களுக்குப் பதில் அளித்து வருகிறார்கள்.  அப்பகுதியில் சாலை விபத்துக்களைத் தவிர்பதற்கான குறிப்புகளையும் புகைப் படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். அதில் வெளியான சமீபத்திய படம்;

புதன், 4 ஜூன், 2014

சாலை விதிகளை மதிப்பீர் விபத்துக்களைத் தவிர்ப்பீர்

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே (65), தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை நேரிட்ட கார் விபத்தில்,உயிரிழந்தார். இந்த விபத்தில் ஏற்பட்ட உள்காயங்கள் மற்றும் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டுநர் கைது: கோபிநாத் முண்டேவின் கார் மீது மோதிய மற்றொரு கார், அங்கிருந்த சிக்னலில் நிற்காமல் வேகமாக வந்து மோதியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த காரில் இருந்த குர்வீந்தர் சிங் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது 279 மற்றும் 304(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும், அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. 

(சிக்னலை மீறி அந்தக் கார் வந்ததால், முண்டேயின் கார் மீது மோதியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.)

போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் ஓட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,  

வியாழன், 8 மே, 2014

நல்லதைச் சொன்னால் கேட்டு பின்பற்றுங்கள்


வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை விளக்குகிறார்கள் இவர்கள் . நீங்களும் வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைத்திட உதவுங்கள்..







நான்கு ஐஐடி இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களுக்கு வேலை கிடைத்ததைக் கொண்டாடுவதற்காக சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குச் சென்றார்கள். 31.3.2014 அன்று அவர்கள் சென்ற இனோவா கார் சாலைவிபத்துக் குள்ளானதில் அந்த நான்கு மாணவர்களும் பலத்த காயமடைந்தார்கள். 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியும்

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

காயம்பட்டபின் யோசித்து என்ன பயன்?


இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்
கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும்.

புதன், 26 மார்ச், 2014

வாகனங்கள் நிறுத்துக் கோட்டைத் தாண்டி நிறுத்தலாமா?

நிறுத்துக் கோட்டிற்கு முன் வாகனத்தை நிறுத்த வேண்டாமா???



கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரம் சிக்னலில் இது வாடிக்கையாக நடக்கும் காட்சிதான்.  இப்படி பல சிக்னல்களில் நிறுத்தக் கோட்டிற்கு முன் வாகனங்கள் நிற்பதில்லை என்பதை முகநூல் (ஃபேஸ்புக்) வழியாக  போக்கு வரத்துக்காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்.  (இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு போலிஸ்காரர் நிற்கும் போதே இப்படி நிறுத்துக் கோட்டைத் தாண்டி வாகனங்களை நிறுத்துகிறார்கள்.)

ஞாயிறு, 9 மார்ச், 2014

நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றிச் செல்லத் தடை



வாகனங்களில், அதன் நீளத்தைத்தாண்டி நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றி செல்லும்போது, எதிர்பாராத விதமாக பிரேக் போட்டால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கம்பிகளில் குத்தி பரிதாபமாக பலியாகின்றனர். இதுபோன்ற வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவது ஒரு பக்கம் என்றால், முன்னால் செல்லும் கம்பி பாரம் ஏற்றிய வாகனம் மீது தங்கள் வாகனம் மோதி விடக்கூடாது என்ற பதற்றத்தில், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் இடது அல்லது வலதுபுறம் திரும்பும்போது, அதனாலும் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் கம்பிகள் ஏற்றிய லாரிகளால் எப்போதுமே தொல்லைதான்.