Powered By Blogger

செவ்வாய், 17 டிசம்பர், 2013

பாதுகாப்பான பயணத்திற்கு

வேகத்தைக் குறைப்பீர்--
உங்கள் பாதுகாப்பிற்காக






------------------------------------------------------------------------------------------------------------

Normal speed meets every need
சாதாரண வேகமே உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும்
-------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 16 டிசம்பர், 2013

வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்





சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும்,தொலைக் காட்சி சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை.   

வலைப் பதிவர்கள் அனைவரும் வரும் சாலை பாதுகாப்பு வாரத்தில் ‘’சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு’’ ஏற்படுத்தும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு வழிகளை தங்கள் வலைத்தளங்களில் எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும். 

எனவே சாலை பாதுகாப்பு வாரம் முழுவதும் (1.1.2013 முதல் 7.1.2013 வரை) அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக் கொள்கிறேன். (அல்லது அவரவர் பதிவுகளின் கீழ் சாலை பாதுகாப்பு ஸ்லோகன்களை இடம் பெறச்செய்யலாம்)

இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்— நண்பர்களே உதவுவீர்களா?
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி  

(என் முந்திய வருடத்திய பதிவின்மறு பதிவு)

---------------------------------------------------------------------------------------------------------------------------------- Night doubles traffic troubles.

இரவு  போக்குவரத்து தொல்லைகளை இட்டிப்பாக்கும்

--------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

சாலை பாதுகாப்பு வாரம்

சாலை பாதுகாப்பு வார  சின்னம்



    அகில இந்திய    
சாலை பாதுகாப்பு வாரம்
(1-1-2014 முதல் 7-1-2014 வரை)

சபதம் ஏற்போம்


சாலை பாதுகாப்பு 



தலைகவசம் அணிதல் விழிப்புணர்வு முகாம் சார்பில் அமைக்கப் பட்ட
 பேனர் பார்த்து பயன் பெறுக


பேனரில் எழுதப்பட்டுள்ள வாசகம்;--
உறுதிமொழி ஏற்போம்
''செல்லிடை பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க மாட்டேன்''

சனி, 8 ஜூன், 2013

காரில் சீட் பெல்ட் அணிவது அவசியம்

    இரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கு குழந்தை பிறந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அந்த பிறந்து மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையை தனி கார் சீட்டில் வைத்து தான் கூட்டிவர வேண்டுமாம். அந்த கார் சீட் பின் புறம் பார்த்தது போல இருக்கும். அதுவும் எப்படி- அக்குழந்தைக்கும் சீட் பெல்ட் அணிவித்திருக்க வேண்டும். இப்படி பிறந்த கைக்குழந்தைக்கே சீட் பெல்ட் போட வேண்டும் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

   இனியாவது கார்களில் பயணம் செய்பவர்கள் (கார் சீட் பெல்ட் இருக்கும் வண்டிகளிலாவது) சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வார்களா?

வியாழன், 6 ஜூன், 2013

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு ஸ்டாப் லைன்



ஸ்டாப் லைன் எனும் நிறுத்தக் கோடு பற்றி பல முறை எழுதியிருக்கிறேன். அது பற்றி காவல் துறையினர் அதிக கவனம் செலுத்தியதாகத் தெரிய வில்லை. அதன் முக்கியத்துவம் காவல் துறையினருக்கே அதிகம் புரியவில்லை என்றே தோன்றுகிறது.

இப்பொழுது விடுமுறையில் அமெரிக்கா வந்துள்ளேன். இங்கு நிறுத்துக் கோட்டிற்கு முன் (முன்தான் அதைத் தாண்டியல்ல) எல்லா வாகனங்களும் கண்டிப்பாக நின்று செல்கின்றன. யாருமே கண்காணிக்காத இடமாக இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும் யாரும் இந்த விதியை மீறுவதில்லை. இதற்கு காரணம் இங்குள்ளவர்களின் (இந்தியர்களையும் சேர்த்தே) கட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும் இதை மீறுபவர்களுக்கு விதிக்கப் படும் அபராதம் மிக மிக அதிகம் என்பதும் இன்னொரு காரணம். நிறுத்தக் கோட்டிற்கு முன் நிற்காத வாகன ஓட்டிகளுக்கு 214 டாலர் (11,812ரூ) சிகப்பு விளக்கை மதிக்காமல் ஓட்டுபவர்களுக்கு 436 டாலர் (24,067 ரூ) அபராதமாக விதிக்கப் படுகிறது.. இது தவிர அவர்கள் ஓட்டி வந்த வாகனத்திற்கான இன்ஸூரன்ஸ் கட்டணமும் அதிகமாகி விடும். எனவே வாகன ஓட்டிகள் இவ்விதிகளை கட்டாயமாக பின்பற்றுகிறார்கள்.

விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு அல்லது விபத்தின் விளைவுகளைக் குறைப் பதற்கு இந்த நிறுத்தக்கோட்டில் நின்று செல்லும் பழக்கத்தை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தலாமே! தமிழகக் காவல்துறையினர் இதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

பாதுகாப்பான ஓட்டும் முறையைப் பயன்படுத்தி விபத்துக்களைக் குறைக்கலாம்


தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடந்த விபத்துக்களின் விவரம்
வாகனங்கள்
நடந்த விபத்துக்கள்
இறந்தவர்கள் எண்ணிக்கை
அரசுப் பேருந்துகள்
4378
1318
தனியார் பேருந்துகள்
3918
999
லாரிகள்/ட்ரக்குகள்
10556
3108
கார்/ஜீப்/ டேக்ஸி / டெம்போ
18248
3617
இருசக்கர வாகனங்கள்
19492
3652
மூன்று சக்கர வாகனங்கள்
3758
430
மற்றவை
5523
2088
மொத்த விபத்துக்கள்
65873
15422
வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பான ஓட்டும் முறையைப் பயன்படுத்தினால் விபத்துக்களைப் பெரும் அளவில் குறைக்கலாம்